1 கிளாஸ் கொத்தமல்லி தண்ணீர்.. கொட்டி கிடக்கும் நன்மைகள்!!

Published : Mar 12, 2025, 09:58 AM IST

கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

PREV
16
1 கிளாஸ் கொத்தமல்லி தண்ணீர்.. கொட்டி கிடக்கும் நன்மைகள்!!

Benefits Of Drinking Coriander Seed Water : கொத்தமல்லி விதை என்பது சமையலறையில் காணப்படும் ஒரு முக்கியமான மசலா பொருள் மற்றும் உடல் ஆரோக்கியமாக வைப்பதற்கான ஒரு சஞ்சீவியாகும். இது கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் பயன்படுத்துகிறோம். கொத்தமல்லி விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் மற்றும் பல ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே இதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இத்தகைய சூழ்நிலையில், கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவற்றை அறிந்தால் இன்றிலிருந்து நீங்களும் அதை குடிக்க தொடங்குவீர்கள். சரி, இப்போது கொத்தமல்லி தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

26
வீக்கத்தை குறைக்கும்

கொத்தமல்லி விதையில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸினேற்றிகள் உள்ளதால் அவை உடலை ஃப்ரீ ரெடிகலிலிருந்து பாதுகாக்க உதவும். எனவே கொத்தமல்லி விதை நீர் வீக்கத்தை குறைக்க உதவும்.

36
நச்சுக்களை அகற்றும்

கொத்தமல்லி விதை தண்ணீர் சிறுநீரக கல் தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகிறது. மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. இதனால் இந்த நீர் சிறுநீர் பாதை தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

46
எடையை கட்டுப்படுத்தும்

கொத்தமல்லி நீரை குடிப்பது மூலம் எடையை கட்டுப்படுத்தும். ஏனெனில் இதில் அதிகளவு நர்சத்து உள்ளதால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும் இதனால் எடையை சுலபமாக குறைக்க முடியும். மேலும் உணவை எளிதாக ஜீரணமாக்கும். 

இதையும் படிங்க:  Weight Loss Tips : உடல் எடையை குறைக்க 'கொத்தமல்லியை' இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

56
செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும்

தினமும் காலை வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் கொத்தமல்லி விதைகளில் செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகள் உள்ளன. எனவே இதன் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற வயிற்றுத் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  வெறும் வயித்துல கொத்தமல்லி டீ குடிங்க; எடையை குறைப்பதோடு இன்னும் பல நன்மைகள்!!

66
இதயத்திற்கு நன்மை பயக்கும்

கொத்தமல்லியில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே இதன் தண்ணீரை குடிப்பதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் அபாயத்தை குறைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories