
நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் தற்போது உலகம் முழுவதும் இதய நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது. மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் இருக்கவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆனால் நம்முடைய உணவு முறையானது இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு சொல்லுகிறோம்.
ஆம், நாம் சாப்பிடும் உணவானது நம்முடைய ஆரோக்கியத்திற்கு 80 சதவீதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே உங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதுபோல, நாம் நம்முடைய உணவு முறையில் செய்யும் சிறிய தவறு தான் சில சமயங்களில் மாரடைப்பு வருவதற்கு காரணமாகிறது. எனவே இதய நோயாளிகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளில் இருந்து சற்று விலகி இருப்பது தான் ரொம்பவே நல்லது. அந்த வகையில் இதயம் நோயாளிகளின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
காஃபி:
இதய நோயாளிகள் அளவுக்கு அதிகமாக காஃபி குடிப்பது இதயத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். நீங்கள் காபி குடிக்க விரும்பினால் ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கு மேல் காபி குடிக்க வேண்டாம். மீறினால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.
பழச்சாறுகளில் சர்க்கரை மற்றும் கலரையும் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் அது இதயத்திற்கு நல்லதல்ல. ஆகவே இதய நோயாளிகள் பழத்தின் சாற்றை குடிப்பதற்கு பதிலாக, அதை பழமாக சாப்பிடுவது தான் நல்லது. இதுவும் குறிப்பாக மாம்பழம் போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவு கொழுப்பு மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால், அது கொலஸ்ட்ரால் ஆபத்தை அதிகரிக்க செய்யவும். எனவே இதய நோயாளிகள் முட்டை சாப்பிட விரும்பினால், வாரத்திற்கு 1-2 முறை முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாம். முக்கியமாக முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே..
இதையும் படிங்க: இதய நோயாளிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
பிஸ்தாவில் சோடியம் அதிகளவு இருப்பதால் இதய நோயாளிகள் இதை சாப்பிடுவதில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் சோடியம் உயர் இரத்த அழுத்த அபாயம் ஏற்படும். விரும்பினால் நீங்கள் குறைந்த அளவில் இதை சாப்பிடலாம்.
இதையும் படிங்க: இதய அடைப்புகளைத் தடுக்க உதவும் 10 இந்திய சூப்பர்ஃபுட்ஸ் இதோ!
இதய நோயாளிகளுக்கு மாவு வகை பொருட்கள் மோசமான தீங்கு விளைவிக்கும் ஏனெனில் அவற்றில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் இது உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும். எனவே இதய நோயாளிகள் மாவில் செய்யப்பட்ட எந்தவொரு பொருட்களையும் சாப்பிட வேண்டாம்.