குளிர்காலத்துல சாதா டீயை விடுங்க..  1 கப் துளசி டீயில் கொட்டி கிடக்கு நன்மைகள்!!

Tulsi Tea Benefits : குளிர்காலத்தில் ஒரு கப் துளசி டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

benefits of drinking tulsi tea during winter in tamil mks
குளிர்காலத்துல சாதா டீயை விடுங்க..  1 கப் துளசி டீயில் கொட்டி கிடக்கு நன்மைகள்!!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையென்றால், பருவகால தொற்று நோய்கள் வருவதற்கான ஆபத்து பன்மடங்கு அதிகமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த 'துளசி டீ' உங்களுக்கு நிச்சயம் உதவும். 

benefits of drinking tulsi tea during winter in tamil mks
குளிர்காலத்தில் துளசி டீ நன்மைகள்

இந்து மதத்தில் துளசியை வழிபடுவார்கள். துளசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது மூலிகை மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. துளசி இலையானது சளி, இருமல், செரிமான கோளாறு தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. முக்கியமாக இது சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமாவிற்கு ரொம்பவே நல்லது. துளசியை பலர் பலவிதமான முறையில் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த குளிர்காலத்தில் தினமும் காலை துளசி டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!


துளசி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்:

குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே, இதற்கு துளசித்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை பருவகாலத் தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.

சளி மற்றும் இருமலுக்கு நல்லது:

குளிர்காலத்தில் சளி, இருமல், தலைவலி,  தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் வருவது பொதுவானது. இத்தகைய சூழ்நிலையில், துளிசி டீ குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இவற்றில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, உங்களது உடலை சூடாகவும் வைத்திருக்கும்.

இதையும் படிங்க:  மூட்டு வலிக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு! சூப்பரான 'மூலிகை டீ'.. ஒன் டைம் குடிங்க.. ஆயுசுக்கும் வராது!!

எடை இழப்புக்கு உதவும்:

துளசி டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். ஏனெனில் துளசியில் இருக்கும் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கொழுப்புகளை எரிக்க உதவும். மேலும் தொப்பையை குறைக்கவும் உதவுகிறது. 

மன அழுத்தத்தை குறைக்கும்:

குளிர்காலத்தில் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், துளசி டீ குடித்தால் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் மனநிலையை புத்துணர்ச்சியாக வைக்கும். மேலும் பதட்டத்தின் அறிகுறிகளும் குறைவாகும். ஏனெனில் துளசிகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பண்புகள் உள்ளன.

முழங்கால் வலி குணமாகும்:

குளிர்காலத்தில் முழங்கால் வலி, மூட்டு வலி வருவது பொதுவானது. எனவே இந்த சீசனில் தொடர்ந்து துளசி டீ குடித்து வந்தால் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் துளசியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முழங்கால் வலியை சரி செய்யும்.

துளசி டீ போடுவது எப்படி?

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் 10-12 துளசி இலைகள், 1/2 அங்குல இஞ்சி (துருவியது) மற்றும் 4-5 கருப்பு மிளகு (இடித்தது) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்ததும் அடுப்பில் இருந்து வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றிக் கொள்ளுங்கள். இனிப்புக்காக இதில் தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் நீங்கள் விரும்பினால் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சளி மற்றும் இருமலுக்கு அருமருந்தான துளசி டீ ரெடி. சூடாக குடியுங்கள். 

குறிப்பு : துளசி டீ குடிப்பதற்கு முன் உங்களுக்கு ஏதேனும் உடலில் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகிய பின்னரே குடிக்கும்.

Latest Videos

click me!