தண்ணீர் குடிக்கும் முறை தெரியுமா? 'இப்படி' குடித்தால் கண்டிப்பா பிரச்சனை தான்!! 

Drinking Water For Digestion : குளிர்ந்த நீரை குடிப்பதால்   செரிமான அமைப்புக்கு பாதிப்பு வரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

தண்ணீர் குடிக்கும் முறை தெரியுமா? 'இப்படி' குடித்தால் கண்டிப்பா பிரச்சனை தான்!!

நாம் சரியான அளவில் தண்ணீர் அருந்தாவிட்டால் உடலுக்கு பிரச்சினைகள் ஏற்படும். அதைப்போலவே குடிநீரை சரியாக தேர்வு செய்யாவிட்டாலும் உடலுக்கு பிரச்சனை தான். குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) மற்றும் வெந்நீர் ஆகியவற்றில் எதை அருந்துவது உடலுக்கு நல்லது என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. சாதாரண நீர் குடித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஐஸ் வாட்டர் சில பாதிப்புகளை தரலாம். சரியான அளவில் நீர் அருந்துவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதனால் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். போதுமான அளவில் தண்ணீர் குடித்தால் செரிமானம் மேம்படும். நீங்கள் தேவையான தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி வரும். அதைத் தவிர்க்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் குளிர்ந்த நீரைவிட வெந்நீர் தான் உடலுக்கு நன்மைகளை செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஏன் என இந்த பதிவில் காணலாம்.   

ஐஸ் வாட்டர் ஏன் நல்லதல்ல?

ஐஸ் வாட்டர் உங்களுடைய செரிமான அமைப்பிற்கு நல்ல மதிப்புகளை தருவதில்லை சோடா ஐஸ்கிரீம் ஐஸ் வாட்டர் போன்றவை நம் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றன இது உங்களுடைய உடலின் அக்னியை (வெப்பம்) குறைக்கும். இதை ஆயுர்வேதம் செரிமான நெருப்பு என்கிறது. 

இதையும் படிங்க:  டீ, காபி குடிக்க குடிப்பவர்கள் ஏன் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனும் தெரியுமா?


ஆயுர்வேதம் சொல்வது என்ன?

உடலின் அக்னியே உடலை பராமரிக்கவும், நிலைநிறுத்தவும் உதவுகிறது.  ஒருவருடைய வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றை பராமரிக்க உடலின் இந்த அக்னி அவசியமாக கருதப்படுகிறது. உடலின் வெப்பநிலை பொதுவாக 37° C ஆகும். இதுவே ஆரோக்கியமான மனிதனின் உடலின் சராசரி வெப்பநிலையாகும். ஐஸ்வாட்டர் இந்த வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க:  தண்ணீர் உடல் எடையை அதிகரிக்குமா? எப்படி குறைக்கனும்..

ஐஸ் வாட்டர் உடலை என்ன செய்யும்?

- குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்க்ரீம் போன்ற உணவுகளை எடுக்கும்போது அது உங்களுடைய அக்னியைக் குறைக்கும். இதனால் செரிமான மண்டலம் பலவீனமாக மாறுகிறது.  உணவு செரிமானம் மந்தமாகி அஜீரண கோளாறுகள் உண்டாகும். இதனால் உடல் பருமனாக மாறுகிறது.  வயிறு வீக்கம் உண்டாகும். 

- ஐஸ் வாட்டர் வயிற்றிலுள்ள அமிலங்கள், பித்த நீரை  நீர்த்துப்போகச் செய்வதால்  அஜீரணத்தை உண்டாக்கும். இந்த திரவங்களை வெப்படுத்த அதிக ஆற்றல் வேண்டும். இதனால் உடலுக்கு பலவீனம், சோம்பல், சோர்வு, அசௌகரியம் ஆகியவை ஏற்படலாம். 

தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

சாதாரண நீர் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஐஸ் வாட்டரை தவிர்க்க வேண்டும்.  செரிமானத்தை மேம்படுத்த தினமும் வெந்நீர் குடிக்கலாம். உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க தோன்றினால் ஒரு மிடறு வெந்நீர் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவுன், பின்னரும் மிதமான சூடுள்ள நீர் அருந்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்தும்.

Latest Videos

click me!