சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய மற்றும் மறந்தும் தொடக்கூடாத பானங்கள் என்னென்ன தெரியுமா?

First Published Jun 8, 2023, 5:27 PM IST

Drinks for Diabetics: சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள் மற்றும் மறந்தும் அவர்கள் குடிக்க கூடாத பானங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

​சர்க்கரை நோயாளிகள் எந்த தயக்கமும் இல்லாமல் குடிக்கக் கூடிய பானம் என்றால் தண்ணீர் தான். இதை நாள் முழுவதும் கூட சர்க்கரை நோயாளிகள் அருந்தலாம். இதனால் அவர்களுடைய சர்க்கரை அளவு உயரவோ அல்லது குறையவோ செய்யாது. நாள் முழுவதும் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. உங்களுடைய உடல் போதுமான நீர்ச்சத்துடன் காணப்படுகிறதா என்பதை அறிய உங்களுடைய சிறுநீரின் நிறம் உதவலாம். வெளிர்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உங்களுடைய உடல் நீர் ஏற்றமாக இருக்கிறது என அர்த்தம். 

 பால் குடிக்கலாமா? 

சர்க்கரை நோயாளிகள் பசும்பால் அருந்தலாம். இதில் புரதச்சத்தும் கால்சியமும் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் சில மருத்துவர்கள் பரிந்துரையின்படி, சர்க்கரை நோயாளிகள் பாலை நேரடியாக அருந்தக்கூடாது. அதில் சிறிதளவு தேயிலை அல்லது காபி தூள் கலந்து சர்க்கரை இல்லாமல் அருந்துவது நல்லது. 

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சோடா குடிக்கலாமா? 

சர்க்கரை நோயாளிகள் சோடா உள்ளிட்ட இனிப்பு கலந்த பானங்களை அடிக்கடி குடிப்பது உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமீபமாக செய்யப்பட்ட ஆய்வில் சர்க்கரை கலக்கப்பட்ட பானங்களை அருந்தாதவர்களை விட ஒரு வாரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட சர்க்கரை கலந்த பானங்களை குடித்தவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஏனென்றால் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள் உங்களுடைய இரத்த ஓட்டத்தில் விரைவில் உறிஞ்சப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு பாதிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் செயற்கை பானங்களை குடிக்காமல் இருப்பதே நல்லது. 

​தக்காளி ஜூஸ் குடிக்கலாமா?​

பழச்சாறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. அவைகளுக்கு பதிலாக தக்காளி சாறு அருந்தலாம். அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால் தக்காளி சாறு உங்களுக்கு நீரேற்றத்திற்கு உதவும். இதில் சர்க்கரை சேர்க்காமல் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். ஒரு நாளில் ஒன்றரை கப் தக்காளி சாறு அருந்துவதால் பல்வேறு சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. பழங்களை ஜூஸாக செய்து குடிப்பதை விட அதை நேரடியாக உண்பது நல்லது. அளவோடு உண்ண வேண்டும். 

​சர்க்கரை சேர்க்காத காஃபி, தேநீர் குடிக்கலாமா?​

சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை தேநீர் அல்லது காபி அருந்தலாம். மிதமாக சர்க்கரை சேர்த்து அல்லது இனிப்பு சுத்தமாக சேர்க்காமல் கூட தேநீர் அல்லது காபி அருந்தலாம். சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை விட எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து அருந்தலாம். கிரீன் டீ டைப்2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. 

இதையும் படிங்க: மாரடைப்பு வரப்போவதை கண்களை பார்த்தே கண்டுபிடிக்கலாம்.. இதோ 5 முக்கிய அறிகுறிகள்..!

​சர்க்கரை நோயாளிகள் மது அருந்தலாமா? 

மது அருந்துவதால் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதால் அமெரிக்க நீரிழிவு சங்கம் மிகவும் கொஞ்சமாக மது அருந்தலாம் என்கிறது. ஆனால் முடிந்தவரை மது அருந்தாமல் இருப்பதே உங்கள் உடல் நலனுக்கு நல்லது. 

இதையும் படிங்க: உங்க வாயில் இந்த மாதிரி சுவையை உணர்கிறீர்களா? அப்ப இந்த ஆபத்துல இருக்கீங்கனு அர்த்தமாம்!! ஜாக்கிரதையா இருங்க!!

click me!