உடலுறவு வைத்துக் கொள்ளும் போது சில பெண்களுக்கு அதிகமான வலி இருக்கும். சில நேரங்களில் அந்த வலி பொறுத்துக் கொள்ள கூடிய அளவில் இருக்கும். சிலர் பயங்கரமான வலியை அனுபவிப்பார்கள். சிலருக்கு உடலுறவு வைத்துப் பிறகு அதிகமான வலி ஏற்படும். இந்த வலி தற்காலிகமானதாகவும் இருக்கும். நீண்டகாலமும் இருக்கும். உடலுறவில் ஈடுபடும்போது பிறப்புறுப்பின் உள்பகுதியில் வலியுடன் கூடிய எரிச்சல் இருக்கும். சில பெண்களுக்கு இந்த வலி உடலுறவு வைத்த சில மணி நேரங்களுக்கு பிறகும் தொடரலாம். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
பெண்களுக்கு உடலுறவின்போது வலியை உண்டாக்கும் 2 முக்கிய காரணங்களாக வல்வோடினியா (vulvodynia), வெஜினிஸ்மஸ் (vaginismus ) போன்றவை சொல்லப்படுகின்றன. பல பெண்கள் வலி தாங்கி பழகியவர்கள். மாதவிடாய் வலி, இடுப்பு வலி, பிரசவ வலி போன்றவை கூட பெண்கள் சகித்துக் கொள்வார்கள். ஆனால் உடலுறவு வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் துடிக்கும் பெண்களும் உண்டு. சில நேரம் அவர்களால் ரொம்ப நேரம் அமர முடியாது.
வல்வோடினியா (vulvodynia)
வல்வோடினியா என்றால் வுல்வா என்ற பகுதியில் உண்டாகும் வலியாகும். பெண்களின் சினைப்பையின் ஒரு பகுதியில் வீக்கம் உண்டாகும்போது வலியை உண்டாக்கும். உடலில் உண்டாகும் பல்வேறு வகை சில பிரச்சினைகளை இந்த வலி ஏற்படுத்தும்.
வெஜினிஸ்மஸ் (vaginismus)
இடுப்புத் தளத்தசைகளில் உண்டாகும் பிடிப்பை வெஜினிஸ்மஸ் என்கிறோம். பொதுவாக கெகல் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அல்லது வாயுத்தொந்தரவால் பாதிக்கப்படும்போது இடுப்பு தசைகள் சுருங்கிவிடும்.
பெண்கள் பாலியல் உறவுக்கு உடல் அல்லது மன ரீதியாகவோ தயாராகும்போது அல்லது உடலுறவு மீது ஏற்கனவே உள்ள பயம் காரணமாக பெண்களுக்கு வஜினிஸ்மஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கணவன் மனைவி இந்த 3 விஷயங்களை பண்ணிட்டா போதும்.. கடவுளே வந்தாலும் அவங்கள பிரிக்க முடியாது!!
உடலுறவு வலிக்கு சில காரணங்கள்:
மெனோபஸ் வரும் சமயங்களில் உடலுறவில் ஈடுபட்டால் வலி ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் உடலுறவில் வலி உண்டாகும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் காலகட்டங்களில் உடலுறவு வைத்து கொள்வதால் வலி எடுக்கலாம். பிரசவத்திற்கு பின்னர் உடலுறவு கொள்ளும்போது பிறப்புறுப்பு பகுதி அதிகமாக வறண்டு காணப்படும். இதனால் வலி வரலாம்.
வலி இயல்பானதா?
உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது சாதாரணமான விஷயம் இல்லை. இது ஒவ்வொரு பெண்களின் உடலை பொறுத்தும் மாறுபடும். முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். பாலியல் ஆசை, பாலியல் உறவுகளில் விருப்பம் இல்லாத போது கட்டாயத்தின் பேரில் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு வலி ஏற்படும். பிறப்புறுப்பு வறட்சி கொண்ட பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலுறவு கொள்ளும் போது அதிகமான வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இதையும் படிங்க: சொந்தக்காரங்க டார்ச்சர் தாங்க முடியலயா? முதல்ல இதை பண்ணுங்க!!