பெண்கள் ப்ரா போடுவதை நிறுத்தினால்.. அவங்க உடலுக்கு நன்மையா? தீமையா?

First Published | Apr 3, 2023, 7:41 PM IST

பெண்கள் உள்ளாடைகளை அணியாமல் தவிர்த்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான உடல் நிலை மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

பெண்கள் ப்ரா போன்ற உள்ளாடைகளை அணிவது குறித்து முடிவெடுப்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனாலும் எல்லோருக்கும் ப்ரா அணிவது விருப்பமாக இருக்காது. உடல் பருமன் கொண்ட பெண்கள் ப்ரா அணிவதால் நிறைய அசௌகர்யங்களை சந்திக்கின்றனர். சிலர் தோற்றத்தை அழகாக கட்டுடல் மேனியாக காட்டி கொள்ள ப்ரா அணிகிறார்கள். ஆனால் ப்ரா அணியாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

சருமம் மேம்படும்! 

பெண்கள் உள்ளாடைகள் அணிவதை நிறுத்தினால் மார்பகத்தை சுற்றி உண்டாகும் அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுடைய மென்மையான சருமத்தை கொண்ட மார்பகங்களில் ஏற்படும் தடங்களும், வலியும் மறைகிறது. ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கலாம். மார்பகங்கள் இயற்கையான வளர்ச்சியை அடையும். 

Tap to resize

ரத்த ஓட்டம் அதிகமாகும்! 

ப்ரா அணியாமல் விட்டால், மார்பகத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். சிலர் ப்ரா இறுக்கமாக அணிந்து கொள்வார்கள். இதனால் மென்மையான தோலில் ரொம்ப அழுத்தம் வந்து காயங்கள் கூட உண்டாகும். அதனால் அவ்வப்போது ப்ரா அணியாமல் பெண்கள் இருப்பது நல்லது. 

மார்பக வலி!! 

பெண்கள் ப்ரா போன்ற இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்த்தல் மார்பு பகுதியில் ஏற்றம் வலி நீங்க செய்கிறது. சில வகைவகை ப்ரா விலா எலும்பு, முதுகு தசை, கழுத்தில் அழுத்தம் உண்டாக்கும். இதனால் வீக்கம், காயம் ஏற்படுத்தலாம். ப்ரா அணியும் போது சுத்தமாக அணியாவிட்டால் அலர்ஜி வரும். அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

இதையும் படிங்க: ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம்! ஆனா இந்த 4 விஷயங்களை செய்தால், விந்துவோட தரம் கூடும்!

ப்ராவுடன் தூக்கம்?

இரவு தூங்கும் போது ப்ரா அணிய வேண்டிய அவசியம் இருக்காது. ப்ரா அணிவதை தவிர்க்கலாம். நல்ல தூக்கம் வரும். சுதந்திரமான தூக்கத்திற்கு இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். அதுவே உடலுக்கு தேவை. இறுக்கமான ப்ராவை தவிருங்கள். சரியான அளவுகளில் வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.  

இதையும் படிங்க: Toxic People: இந்த 3 வகை மனிதர்களை கிட்ட சேர்க்காதீங்க! இவங்க நீங்க நல்லாவே இருக்கக் கூடாதுனு நினைக்குறவங்க!!

Latest Videos

click me!