உலர் பழங்கள்!!
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். தினசரி குறைந்தது 2 பாதாம், 1 வால்நட், 2 அத்திப்பழம், 3 முதல் 4 உலர் திராட்சைகளை ஊறவைத்து உண்பதை பழக்கப்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களுடைய உடலில் மாற்றம் தெரியும்.
உடல் செயல்பாடு!!
பெரும்பாலான ஆண்கள் டெஸ்க் சார்ந்த வேலைகளை செய்கிறார்கள்
சிலர் உடல் உழைப்பை கோரும் கடினமான வேலைகளையும் செய்வார்கள். இந்த பிஸியான நேரத்தில் உடல் செயல்பாடு இல்லாமல் போய்விடக் கூடாது. சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் மலட்டுத்தன்மை உங்களுக்கு வர வாய்ப்பே இல்லை. உங்கள் இதயம் அல்லது பிற உறுப்புகளும் இதனால் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த 4 விஷயங்களை கவனமாக செய்து வந்தால் உங்களுடைய விந்தணு தரமும், எண்ணிக்கையும் அதிகமாகும்.