உடலுறவை ரசிக்காத பெண்களிடம்... இந்த 5 விஷயங்களை செய்தால்... பாலுணர்வு பாய்ந்தோடும்..!

First Published | Mar 31, 2023, 3:11 PM IST

உடலுறவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல நன்மைகளை தருகிறது. 

உடலுறவில் ஈடுபடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. சில ஆய்வுகளின்படி, உடலுறவில் தொடர்ந்து ஈடுபட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலுறவு உடல், மனம் இரண்டையும் நன்கு பாதுகாக்கக் கூடியது. பெண்களுக்கு செக்ஸ் சுவாரஸ்யமாக மாற என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.  

உடலையும் மனதையும் அறிதல்..! 

நீங்கள் உடலுறவை எப்படி அனுபவிக்க விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது தெரிந்துவிட்டால் அதை அழகாக செய்து உடலுறவை அதிகமாக அனுபவிக்க முடியும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கே தெரியாவிட்டால் திருப்தி அடைய முடியாது. எனவே உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உங்கள் துணையிடம் மறைக்காமல் சொல்லுங்கள். மன அழுத்தமாக இருந்தால் உடலுறவில் கவனம் வராது. அதனால் நிகழ்கால விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள். பெண்களே உடலுறவை முழுமையாக அனுபவிக்க வீடு, குழந்தை மற்ற பிரச்சனை, கவலைகளை ஒதுக்கி வையுங்கள். 

Tap to resize

மனநிலை..! 

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடல் வடிவம் கிடையாது. அதை நினைத்து வருந்தக் கூடாது.  சினிமா ஹீரோயின்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும் என நினைக்காதீர்கள். பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்த விஷயம் தான் பாதிக்கும். இது உங்கள் துணையிடம் இருந்து உங்களை விலக்கி வைக்கலாம். உங்களை உண்மையாக நேசிப்பவர்களுக்கு உங்களுடைய தோற்றம் அதன் அசலான வடிவத்திலே பிடித்தமானதாக இருக்கும். இப்படிப்பட்ட கவலைகளை கொண்ட பெண்கள் உடலுறவை ரசிப்பதில்லை. ஆகவே முதலில் இந்த மனக்குறை இருந்தால் அதை நீக்க வேண்டும். உடலுறவுக்கு முன் உங்கள் துணை மனநிலையை அறிந்து கொள்ளுங்கள். 

நம்பிக்கை..! 

உங்கள் துணை மீது நம்பிக்கை இல்லை என்றால் உடலுறவில் இன்பம் கிடைக்காது. அன்புக்குரியவர்களிடம் இருந்து நீங்கள் அந்நியப்பட்டதாக உணர்ந்தால் அல்லது உங்கள் துணை மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர்களுடன் உடலுறவு கொள்வது சிரமம். அதனால் உங்கள் துணையை நம்புங்கள். உறவுக்குள் நம்பிக்கையை உருவாக்கிவிட்டால் மற்ற விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடும், இன்பமும் கிடைக்கும். 

இதையும் படிங்க: பெண்ணுறுப்பில் பாம்பு.. ஆணுறுப்பில் சேவல் ரத்தம்... ஆப்பிரிக்காவின் நடுங்கவைக்கும் செக்ஸ் பழக்கங்கள்..!

இந்த பிரச்சனையை கவனிங்க..! 

உடலுறவில் அடிக்கடி ஈடுபடும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக  கூறியுள்ளனர். இதனால் அவர்களின் பாலியல் செயல்பாடு நன்றாக இருப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், அவர்களுடைய யோனி வறட்சி தான் என கூறப்படுகிறது. உறவு கொள்ளும் போது யோனியை வறட்சியாக இல்லாமல் பார்த்து கொண்டால் பாதி பிரச்சனைகள் ஓய்ந்துவிடும். இதற்கு  லூப்ரிகண்டுகள், மாய்ஸ்சரைசர்கள் போன்றவை பயன்படுத்தலாம். உறவு கொள்ளும்போது பிறப்புறப்பில் ஈரப்பதம் இன்றி வறட்சியா வைத்து கொண்டால் வலியும், நோயும் தான் வரும். இன்பம் காண முடியாது.

இந்த விஷயங்களை பெண்கள் சந்தித்தால் உடலுறவு நன்றாக இருக்காது. அதனால் உங்கள் துணைக்கு உதவுங்கள். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: கள்ள உறவு இயல்பானதா? கணக்கெடுப்பில் தெரிய வந்த பகீர் காரணங்கள்..!

Latest Videos

click me!