தலைமுடி உதிர்வுக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம், நல்ல தூக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் நாம் முறையாக பராமரிக்காததே தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம். முடி உதிர்வு, அடர்த்தியின்மை, நரைமுடி, இளநரை ஆகியவை ஏற்படாமல் தடுக்க, முடி நன்கு வளர்ந்து வர வேம்பாளம் பட்டை நமக்கு உதவும். இதை எப்படி தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பண்டைய காலம் முதலாகவே முடி உதிர்வதற்கு வேம்பாளம் பட்டை தான் நல்ல தீர்வாக இருந்துள்ளது. இதை தேங்காய் எண்ணெயில் சேர்த்தால் சிகப்பு வண்ணமாக மாறிவிடும். இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம். ரொம்பவும் விலை குறைவு. 1 கைப்பிடி பட்டை எடுத்து, 100 மிலி தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வையுங்கள். இந்த பட்டைகள் நாள் முழுக்க எண்ணெயில் ஊற வேண்டும். சிவப்பு நிறமாக மாறிவிடும். இதை வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
வேம்பாளம் பட்டை கலந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் தலைமுடிகளை நன்கு வளர தூண்டும். வேம்பாளம் பட்டையின் சாறு, தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள தொற்றுகளை வேரோடு விரட்டும். பொடுகு தொல்லை தீர்ந்துவிடும். தலையில் உள்ள சூட்டை விரட்டி முடி வளர்ச்சியை தூண்டும்.