பேரழகு பெற! முகம் கழுவும்போது இந்த தப்பு பண்ணாதீங்க, இத சரி பண்ணினா எல்லா சரும பிரச்சனையும் 1 வழியில் தீரும்!

First Published Apr 3, 2023, 7:50 AM IST

மிருதுவான அழகான சருமத்திற்கு நம் முகத்தை சரியாகக் கழுவுவது முக்கியம். முகம் கழுவும் போது செய்யும் சில தவறுகளால் பருக்கள், சுருக்கங்கள் வர வாய்ப்புள்ளது.

முதல் தவறு 

உங்கள் முகத்தை சரியாக கழுவ சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். நீங்கள் முகத்தில் பூசும் சரும சுத்தப்படுத்தியை (க்ளென்சர்) சரியாக கழுவாமல் விடுவது தவறு. அதாவது சருமத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தும் தயிர், தேன் போன்ற பேஸ் பேக்கை தான் க்ளென்சர் என்பார்கள். கடைகளில் கூட இவை க்ரீமாக கிடைக்கும். இப்படி போடும் க்ளென்சரின் சுத்தமாக நீங்க, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவுங்கள். எப்போதும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சரை தேர்வு செய்யவும். குறைந்தது 60 வினாடிகள் முகத்தை கழுவ வேண்டும். முகத்தை சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும். 

இரண்டாவது தவறு 

நெற்றி, மூக்கு, கன்னம் ஆகிய எண்ணெய் பசை அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி கழுவ வேண்டும். க்ளென்சர் பூசி இருந்தால் நன்கு போகும் வரை கழுவ வேண்டும். சருமத்தில் க்ளென்சர் மசாஜ் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ வேண்டும். வெகுநேரம் முகம் கழுவாமல் இருந்தால் சருமத்தில் அழுக்கு படியும். அதனால் அப்படி இருக்காதீர்கள். 

மூன்றாவது தவறு 

முகத்தை கழுவ மிகவும் சூடாக அல்லது மிகவும் குளிராக இருக்கும் நீரை பயன்படுத்துவது முக்கியமான தவறு. அதிகம் சூடான நீரை பயன்படுத்துவது உங்களுடைய தோலில் கடுமையான பாதிப்பை கொடுக்கும். ரொம்ப சூடாக இருக்கும் நீரை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சியை உண்டாக்கும். மிகவும் குளிர்ந்த தண்ணீரைப் பயன்படுத்துவது சருமத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெயை திறம்பட அகற்றாது. உங்கள் முகத்தை கழுவுவதற்கு சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்.  

நான்காவது தவறு 

கடைகளில் க்ளென்சர்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எல்லா க்ளென்சர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடினமான க்ளென்சரை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்களை கூட அகற்றிவிடும். இதனால் சருமம் வறண்டு எரிச்சல் வரும். மிகவும் மென்மையான க்ளென்சரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது உங்கள் தோலில் உள்ள அழுக்கு, எண்ணெயை நன்கு அகற்றாது. அதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சரை பயன்படுத்துங்கள். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!

ஐந்தாவது தவறு

முகம் கழுவும்போது நகங்களால் சுரண்டி சுத்தம் செய்யக் கூடாது. கடினமாக நகங்களால் ஸ்க்ரப் செய்தால் பருக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மென்மையாக கைகளால் தேய்த்தால் போதும். தினமும் 4 அல்லது 5 முறை முகம் கழுவுங்கள். இயல்பாகவே பேரழகு வசப்படும். 

இதையும் படிங்க: முகத்தைப் பருக்கள் வடுக்கள் இல்லாமல் பொலிவாக வைக்க வெட்டிவேர் 1 போதும்! முகப்பருவின் தடம் தெரியாமல் மறையும்..!

click me!