கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை பெற வீட்டில் இருக்கும் பச்சைப்பயறு ஒன்று போதும். இது கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை கொடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவித்து விரைவு படுத்தும்.
முடி வளர்ச்சி ஹார்மோன் :
பச்சை பயறு முடிக்கு போதுமான வளர்ச்சியை ஊக்குவித்து, முடி வலிமை பெற உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு ரசாயனம் கலந்த மருந்துகளை எடுப்பதற்கு பதிலாக பச்சை பயிறை உபயோகித்து பலன் பார்க்கலாம். இதை வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. தவிர அதிலுள்ள அமிலத் தன்மை மயிர்க்கால்களை இறுக்க உதவி முடி உதிர்தலைக் கட்டுப் படுத்துகிறது.
முடி வரட்சியை தடுக்க :
பச்சைபயிறில் இருக்கும் இரும்பு சத்து முடியின் அடியில் இருக்கும் தோலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வரட்சியை முற்றிலும் நீக்கி பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தலை வளர செய்கிறது.
முடி வளர்ச்சிக்கு பச்சை பயறு :
முடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர பச்சை பயறு ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.