தக்காளி:
ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் கண்களுக்கு கீழிருக்கும் கருவளைய பகுதிகளில் தடவி விட்டு சுமார் 10 நிமிடங்கள் வரை உலர வைத்துபிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தக்காளியில் இருக்கும் லைக்கோபின் மற்றும விட்டமின் சி போன்றவை தோலினை பாதுகாக்கும்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரியில் அதிக அளவு நீர் சத்துக்கள் இருப்பதால் அவைகளை கண்களுக்கு மேற்புறத்தில் வைப்பதால் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து பிரெஷ்ஷாக வைக்க செய்யும். மேலும் இது கருவளையத்தையும் நீக்க கூடியது.