வயது ஏற ஏற நமது உடம்பில் பல மாற்றங்கள் ஏற்படும். சில மாற்றங்கள் நமது உடம்பின் உள்ளே ஏற்படும். சில மாற்றங்கள் நமது உடம்பின் வெளிப்பகுதியில் ஏற்படும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் நமது தோல்கள் சுருங்கத் தொடங்கி உடல் பொலிவில்லாமல் காணப்படும் .
ஆனால் வயதானாலும் என்றும் இளமையான தோற்றத்தில் இருக்க நாம் தினமும் மாதுளம்பழத்தை சேர்த்தாலே போதுமமென்று சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
மாதுளை பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற வேதிப் பொருள், நம் உடலின் செல் சுத்திகரிப்பு மையத்தினை புத்துணர்வு அடையச் செய்வதால் நமது உடம்பில் இருக்கும் செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஒரே ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.
ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதத்தில் நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளே தருகிறது. அந்த வகையில் மாதுளை பழம் என்னென்ன நன்மைகளை குறிப்பாக உடல் தோற்றத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
சுருக்கங்கள் மறையும் :
மாதுளைப் பழ விழுதை பட்டருடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அதனை தோலில் தொய்வுள்ள இடங்களில் அப்பளை செய்து, சுமார் 10 நிமிடங்கள் சென்ற பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வர தோல் சுருக்கங்கள் காணாமல் போகும்.