கண்ணை சுத்தி கருவளையம் நிரந்தரமா நீங்கி.. பேரழகை பெற உருளைக்கிழங்கு 1 போதும்.. உங்க மேனி ஜொலிக்க தொடங்கும்

First Published | Mar 10, 2023, 6:30 PM IST

உருளைக்கிழங்கு சாறு அருந்தும்போது உடலில் பல்வேறு நோய்கள் நீங்கி அற்புதம் நடக்கும். அதுமட்டுமின்றி சருமமும் மிருதுவாகி பேரழகுடன் ஜொலிக்கும். 

உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது பெரும்பாலான காய்கறிகளை விடவும் அதிகம் சத்து கொண்டது. நல்ல வெந்து போன உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மாவு மாதிரி ருசியாக இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். ஆனால் உருளைக்கிழங்கை ஜூஸாக அடித்து அருந்தும்போது இன்னும் நிறைய அற்புத பலன்கள் கிடைக்கிறது. 

உருளைக்கிழங்கை கூட்டு, குழம்பு என சமைத்து சாப்பிடுவதை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜூஸாக அருந்தியுள்ளீர்களா? அப்படி குடிப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பொரித்தோ, அவித்தோ உண்பதை விடவும், இவற்றின் சாற்றைக் குடிப்பதாலும், முகத்தில் தடவி கொள்வதாலும் பலன்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. 

Tap to resize

கரும்புள்ளிகளை நீக்கி ஜொலிப்பான சருமம்.. 

சில ஆய்வுகளின்படி, பச்சையாக உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவுவதால், கரும்புள்ளிகள், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள், ஹைப்பர் பிக்மெண்டேஷம் எல்லாம் நீங்கிவிடும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பச்சை உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சு வைத்து நனைத்து கண்களுக்குக் கீழே தடவி கொள்ள வேண்டும். விருப்பப்பட்டால் தோலையும் கூட தேய்க்கலாம். இது சருமத்தை பளபளப்பாகவும் இறுக்கமாகவும் மாற்றி உங்களை இளமையாக காட்டும்.

தோல் அழற்சியை குறைக்கும்.. 

உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து 10 முதல் 15 நாட்களுக்கு அலர்ஜியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். 

இளநரை நீக்கும்

உருளைக்கிழங்கு சாற்றைத் தொடர்ந்து அருந்தினால் பொடுகுத் தொல்லை, இளநரை ஆகிய பிரச்சனைகளை நீக்கும். 

இதையும் படிங்க: தலைமுடி காடு மாதிரி அடர்த்தியா வளர.. வாரம் இருமுறை கிராம்பு.. இப்படி பண்ணுங்க முடி கட்டுக்கடங்காம வளரும்...

கீல்வாதம் வலி நிவாரணம் 

உங்களுக்கு தெரியுமா? மூட்டு வலிக்கான பொதுவான காரணமே அதிக யூரிக் அமில அளவு தான். நிபுணர்களின் என்ன சொல்கிறார்கள் என்றால், உருளைக்கிழங்கு சாற்றை அருந்தினால் அமில அளவை குறைக்க முடியுமாம். நம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது. 

வலி, வீக்கத்திலிருந்து நிவாரணம்.. 

உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் மூட்டுகளில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுகிறதாம். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. மக்களே.. இதை குடித்தால் மூட்டுவலியின் வலி குறையும். 

இரும்புச்சத்து, வைட்டமின் சி கிடைக்கும்..

வைட்டமின் சி, இரும்புச்சத்துக்கான பொக்கிஷம் உருளைக்கிழங்கு. ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வைட்டமின் சி உள்ளது. மேலும், நம் உடலில் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கக் கடிய இரும்புச்சத்தும் மிகுதியாக உள்ளது. 

அமிலத்தன்மை குறையும்.. 

பொதுவாகவே உருளைக்கிழங்கு சாறு அதிக காரத்தன்மை கொண்டது. இதை அருந்துவதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது. இதனால் அசிடிட்டி குணமாகும். 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!

Latest Videos

click me!