முகம் பளிச் என்று இருந்தாலே அது ஒரு அழகுத் தான். கருப்போ , மாநிறமோ, வெள்ளையோ எப்படி பட்ட ஸ்கின் டோன் ஆகா இருந்தாலும் அனைவரும் முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள்.
முகம் எப்போதும் பொழிவா இருப்பதற்கு ,பார்த்த உடனே பளிச் என்று வைத்துக் கொள்ள நிறைய செலவு செய்ய வேண்டும், அதற்காக தனியா நாம நிறைய பவுடர், க்ரீம் போன்றவற்றை பூசி தான் நம்மளை நாம் மெருகேத்திக்கணும் அப்படின்றதெல்லாம் தேவை இல்லைங்க.
வீட்டிலேயே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே ரொம்ப ஈஸியா ரொம்ப அழகா நம்மை நாம் பராமறி க்கலாம். நம் பாட்டி காலத்தில் என்ன வீதிக்கு வீதி பார்லர் இருந்ததா என்ன? எல்லார் வீட்டிலும் அழகுக் குறிப்பு சொல்ல ஒரு பாட்டியோ,பெரியவங்க இருப்பார்கள். அவர்கள் சொல்லும் குறிப்புக்களை ஃபாலோ செய்து அழுகு படுத்திக் கொண்டோம்