Oil Skin Care : எண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட... இதோ 5 வழிமுறைகள்..!!

First Published | Mar 3, 2023, 3:38 PM IST

எண்ணெய் பசையுள்ள சருமத்தில் முகப்பருக்கள் அதிகமாக ஏற்படும். எண்ணெய் சருமம் பல சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் எண்ணெய் சருமத்தை போக்குவதற்கான வழிகளை பார்க்கலாம்.
 

பொதுவாக பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு எண்ணெய் பசையுள்ள சருமம் தான் இருக்கும். இதுவொரு இயற்கையான சரும அமைப்பாகும். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக, தற்போது இந்த சருமம் பலருக்கும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக வெயில் காலங்களில் எண்ணெய் பசை கொண்டவர்களுக்கு  ரொம்பவும் சங்கடம் ஏற்படும். அதன்காரணமாக எண்ணெய் பசையை விட்டொழிக்க பலரும் விரும்புகின்றனர். எண்ணெய் பசையுள்ள சருமத்தில் முகப்பருக்கள் அதிகமாக ஏற்படும். எண்ணெய் சருமம் பல சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

முகத்தில் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கு முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய சில வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரில் சருமத்தில் உள்ள எண்ணெய் அளவைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை, பஞ்சில் நினைத்து உங்கள் முகத்தில் தட வேண்டும். கிட்டத்தட்ட 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரை கழுவி விடுங்கள். இது சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
 

Latest Videos


எலுமிச்சைச் சாறு

எலுமிச்சை சாறு சில இயற்கை சேர்மங்களைக் கொண்டுள்ளது. அதேபோன்று சிட்ரிக் அமிலமும் அதில் இடம்பெற்றுள்ளது. அரை எலுமிச்சம்பழத்தில் இருந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து, பஞ்சு கொண்டு சாற்றை முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தால், சீக்கரமே சருமம் எண்ணெய் பசையில் இருந்து விடுபடும்

தேன்

தேனில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எண்ணெய் சருமத்திற்கு இது ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். உங்கள் முகத்தில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு தடவவும். இது எண்ணெய் தன்மையை நீக்க உதவுகிறது.

கோடைக் காலம் வரப்போகிறது- இளநீர் பற்றி தெரிந்துகொள்வோமா..??

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெயின் அளவைக் குறைக்க உதவுகிறது. தேயிலை  எண்ணெயை தேங்காய் பால் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்றவற்றுடன் கலந்து, பஞ்சு கொண்டு முகத்தில் தடவ வேண்டும். 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகத்தில் உள்ள எண்ணெயை அகற்ற உதவுகிறது.
 

click me!