கற்பூரம் பூஜைக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நல்லது- தெரியுமா உங்களுக்கு?

First Published Feb 25, 2023, 9:39 AM IST

கற்பூரத்தின் சில பண்புகள் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நீக்கும். இந்த கற்பூர பரிகாரங்கள் நம் வாழ்வில் செழிப்பை கொண்டு வர உதவியாக இருக்கும்.
 

camphor

கற்பூரம் இந்து வழிபாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். ஒவ்வொரு கடவுளுக்கான வழிபாட்டிலும் கற்பூரத்தைப் பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எந்த வழிபாட்டு முறையிலும் கற்பூரம் இல்லாமல் போனால், அது பூரணத்துவம் அடையாதது போல தோன்றுவிடும். வீட்டில் தினமும் பூஜை முடிந்து அல்லது மாலையில் கற்பூரம் ஏற்றி வைப்பது சிறந்தது. கற்பூரத்தை எரிப்பது வீட்டின் வளிமண்டலத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் எதிர்மறை சக்தியை நீக்குகிறது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

கற்பூரத்தில் இருக்கும் சில பண்புகள் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நீக்கும். அதை வைத்து நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிகாரமும், நம் வாழ்வில் செழிப்பை கொண்டு வர உதவியாக இருக்கும். இருப்பினும், வழிபாடு மற்றும் பூஜை தவிர, கற்பூரம் மருத்துவ பயன்பாட்டுக்கும் உகந்ததாக உள்ளது. அதற்கு காரணம் அதில் காணப்படும் மருத்துவ குணங்களாகும். சுவாசப் பிரச்னைகள், சரும நோய்கள், முடி ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல தேவைகளுக்கு கற்பூரம் சிறந்த தீர்வினை வழங்குகிறது. 
 

Camphor health benefits

கற்பூரத்தை போலவே, அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதனுடைய பயன்பாடு முடி ஆரோக்கியத்துக்கு பல நன்மைஅக்ளை சேர்க்கிறது. கற்பூர எண்ணெய் நமது உச்சந்தலையின் அழகிற்கும் வளர்ச்சிக்கும் நல்லதாக அமைகிறது. அந்த வகையில் கற்பூர எண்ணெய்யை தயாரிப்பது எப்படி? அதை பயன்படுத்துவது எப்படி? அதன்மூலம் முடிக்கும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கற்பூர எண்ணெயின் நன்மைகள்

கற்பூர எண்ணெயை தலைமுடியில் தடவினால் முடி வேகமாக வளரும். மேலும், முடி உதிர்வு படிப்படியாக குறைந்துபோய், முடியின் வேர்க் கால்கள் வலுபெறும். தலைமுடியில் கற்பூரத்தை தடவுவது நரை முடிக்கு மருந்தாகும். கற்பூர எண்ணெய் முடியை நீண்ட நேரம் கருப்பாக வைத்திருக்கும். இது இளவயதில் நரைப் பிரச்னை கொண்டவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

கற்பூர எண்ணெய் குணநலன்கள்

கற்பூர எண்ணெயைப் பயன்படுத்தினால் முடி உதிர்வைக் குணப்படுத்தலாம். மேலும், முடி மிகவும் உயிர்ப்புடனும்  மென்மையாகவும் மாறும். கற்பூர எண்ணெயைப் பயன்படுத்துவது முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் அழுக்குகளை அகற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உங்களுடைய தலைக்கு பொடுகுத் தொல்லை, அரிப்பு போன்ற பிரச்னைகள் இருக்காது.

உண்மையில் பித்தம் ‘வில்லன்’ கிடையாது- அது ஒரு ’ஹீரோ’

கற்பூர எண்ணெய் தயாரிப்பது எப்படி?

ஒரு கப் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். அதனுடன் சிறிது கற்பூரம் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி குறைந்தது 4 மணி நேரம் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், உங்கள் தலைமுடிக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

click me!