thyroid
தங்களின் அழகை மெருகேற்றுவதில் அதிகபட்சம் பெண்கள் தான் சிரமப்படுவார்கள். ஏனெனில், பெண்கள் தான் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் ஆண்களும் அழகு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினர், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ, அழகை வெளிப்படுத்தும் விஷயத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் செலவும் அதிகம் தான்.
foot massage
அழகில் கவனம் செலுத்தும் ஆண்கள்
ஆண்கள் முகத்தை பளிச்சென்று காண்பிக்க பல க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். தாடியையும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல ஸ்டைல்களில் மாற்றிக் கொள்கின்றனர். அதேபோல் உடல் கட்டமைப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஜிம்முக்குச் செல்லுதல் மற்றும் உணவு முறையில் கட்டுப்பாடுகள் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும், ஆண்கள் தங்களது பாதங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது கேள்விக் குறி தான். அவ்வகையில் ஆண்கள் தங்களுடைய பாதங்களை முறையாக பராமரித்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாக்ஸில் கவனம்
ஆண்கள் நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருப்பதால் பாதங்களுக்கு காற்று செல்வது மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே முடிந்த வரையில் சாக்ஸ் அணிவதை குறைக்கலாம். அன்றாடம் சாக்ஸை மாற்றுவதும் பாதங்களுக்கு நன்மை அளிக்கும்.
நகங்களை வெட்டுங்கள்
கைகளில் உள்ள நகங்களை வெட்டுவதைப் போலவே, கால் நகங்களையும் தண்ணீரில் ஊற வைத்து, சவர்க்காரமிட்டு சிறிது நீளமாக விட்டு குறுக்கு நேராக வெட்டுதல் வேண்டும்.
பாத வெடிப்பைத் தவிர்த்திடுங்கள்
ஆண்களுக்கு பாத வெடிப்பு ஏற்பட பெரும்பாலும் பித்தமே காரணமாகும். பாத வெடிப்புகளை அலட்சியம் செய்யாமல், கால்களில் மஞ்சள் தடவினால் சிறிது நாட்களிலேயே நீங்கி விடும்.
tingling feet
பாதங்களுக்கு லோஷன்
பாதங்களுக்கு லோஷன் தேய்ப்பதன் மூலம் எப்போதும் பளிச்சென்று இருக்கும். இருப்பினும் கெமிக்கல்ஸ் நிறைந்த லோஷனை குறைவாக பயன்படுத்துவது நல்லது.
மேற்கண்ட சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். பாதங்களில் அழுக்கு சேராமல் பளிச்சென இருக்கும்.