பல்வேறு சருமபப் பிரச்னைகளை நொடி பொழுதில் விரட்டில் ஒரு கரித்துண்டு..!!

First Published | Feb 24, 2023, 11:35 PM IST

ஃபேஷன் மற்றும் அழகு பராமரிப்பு துறையில் அவ்வப்போது புரட்சிகரமான கூறுகள் அறிமுகமாகிக் கொண்டே வரும். அதன்படி தற்போதைய டிரெண்டிங்கான விஷயம் ‘கரி’. இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

இயற்கையான பொருட்களில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் ஒரு பொருள் தான் கரி. மரம் போன்ற கார்பன் அடிப்படையிலான பொருட்கள் எரிக்கப்படும் போது இது நமக்கு கிடைக்கிறது. இவற்றில் செயல்படுத்தப்பட்ட கரி மற்றும் சராசரி எரி என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுக்குமான பயன்கள் மற்றும் நன்மைகள் ஒன்றுதான் என்றபோதிலும் குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன. சமீபகாலமாக பல்வேறு அழகு பராமரிப்பு செயல்பாட்டில் கரி பயன்படுத்தப்படுகின்றன. சருமத்துக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்றும், தோலுக்கு செயல்படுத்தப்பட்ட கரி பல்வேறு நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சருமத்துக்கு கரி நல்லதா?

ஏற்கனவே பல்வேறு ஸ்கிரெப், ஃபேஸ்பேக் மற்றும் கிளன்ஸிங்களில் செயல்படுத்தப்பட்ட கரி மூலப்பொருளாக உள்ளது. இதன்மூலம் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மாசுகள் எளிதாக அகன்றுவிடும். சருமத்தில் இதை தேய்த்து சுத்தப்படுத்தும் போது, பல நச்சுகளின் விளைவுகள் வெளியே உறிஞ்சப்படும். எனினும் ஒருசிலருக்கு கரி பயன்பாடு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெயரில் சருமப் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவது நல்லது.

Tap to resize

கரியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சருமத்தில் இருக்கும் எண்ணெய், அழுக்கு போன்றவற்றை வெளியேற்றும் திறன் கரிக்கு உள்ளது. அதேபோன்று பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு தோலில் ஒரு சிறிய கடற்பாசி போல் செயல்படுகிறது. உங்களது முகத்துக்கு அடிக்கடி கரியை வைத்து சுத்தப்படுத்தினால், முகப்பரு போன்ற பிரச்னைகள் வராது. எனினும் ஒருசில மருத்துவ ஆய்வுகள் இன்னும் இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் உள்ளன. கரியின் நேர்மறையான விளைவுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. எனினும், இதை பல பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் சருமப் பராமரிப்புக்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

சருமம் பொலிவு பெறும்

பலரும் கரியை வைத்து ஃபேஸ்மாஸ்க் செய்து, தங்களுடைய அழகை பரமாரித்து வருகின்றனர். அதற்கு 1/3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூடு கரித் தூள், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ள வேண்டும். இதை அனைத்தையும் கலக்கி ஒரு டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை இதை உங்களுடைய முகத்தில் பூசி சுத்தம் செய்து வரவே, சருமம் பொலிவுடன் இருக்கும்.

கரும்புள்ளிகளை விரட்டும்

அரிசி மாவுடன் கரித்தூளை கலக்க வேண்டும். அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். வாரத்துக்கு இருமுறை, இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு மிதமான சூடு நீரில் கழுவ வேண்டும். நன்றாக கழுவிய பிறகு பி.எச் குறைந்த சோப்புப் போட்டு மிதமான சூடுகொண்ட தண்ணீரில் கழுவ வேண்டும். இதன்மூலம் சருமத்திலுள்ள கரும்புள்ளிகள் போய்விடும்.

உங்களால் கருப்பு நிறத்தை பார்க்க முடியவில்லையா? அப்போ இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!

பருக்கள் வராமலிருக்க

ஒரு ஸ்பூன் கற்றாலை இழை ஜெய், ஒரு ஸ்பூன் களிமண், ஒரு ஸ்பூன் செயல்திறன் கொண்ட கரித் தூள், 2 அல்லது 3 சொட்டு தேநீர் அயில் எடுத்துக்கொள்ளவும். அவற்றை நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். இதை வாரம் ஒருமுறை முகத்தில் தேய்த்து, 10 நிமிட இடைவெளிக்கு பிறகு கழுவ வேண்டும். இதன்மூலம் பருக்கள் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எனினும் கரித்தூளை உங்களுடைய சருமத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்னதாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

Latest Videos

click me!