தலைமுடி காடு மாதிரி அடர்த்தியா வளர.. வாரம் இருமுறை கிராம்பு.. இப்படி பண்ணுங்க முடி கட்டுக்கடங்காம வளரும்...

First Published | Mar 10, 2023, 2:58 PM IST

clove for hair growth: கிராம்பு மூலிகை மூலம் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்ப்பது எப்படி என காணலாம்.  

கிராம்பு நம் வீட்டில் இருக்கும் முக்கியமான வாசனை பொருள். இந்த மூலிகையை உணவில் சேர்க்கும்போது வாசனையும் சுவையும் கூடுதலாக இருக்கும். கிராம்பில் இரும்புச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அப்படிப்பட்ட கிராம்பை நம் தலைமுடிக்கு பயன்படுத்தும் போது வாசனையாக இருப்பதோடு மட்டுமில்லாமல், தலையில் ஏற்படும் தொற்றுகளை கூட நீக்கி முடி வளர்ச்சியை தூண்டிவிடும். 

கிராம்பில் பீட்டா கரோட்டின்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதில் உள்ள வைட்டமின்களும், ஆன்டிஆக்சிடன்களும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. அதுமட்டுமா கிராம்பு வாய் துர்நாற்றம், பல் வலி, வாயுத்தொல்லை, பேதியுடன் வரும் வாந்தியும் குமட்டலும் கூட இந்த கிராம்பால் குணமாகிவிடும். அது சரி முடியை எப்படி வளர வைக்கும்னு தான கேட்குறீங்க.. அதிகமான சத்துக்கள் கொண்ட கிராம்பை வைத்து எளிமையாக முடியவை வளர வைக்க முடியும். 

Tap to resize

கிராம்பில் உள்ள ஈஜினால், வைட்டமின் கே முடியின் வேர்க்கால்களைத் தூண்டிவிட்டு ரத்த ஓட்டத்தைத் மேம்பட செய்யும். இதனால் முடியின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

இந்த கிராம்பின் சத்துக்கள் கிடைக்க நாம் கிராம்பு நீரை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். கிராம்பு நீரை நம் தலையில் உபயோகிக்கும் முன்னர் தலைமுடி மற்றும் ஸ்கால்ப் ரொம்ப சுத்தமா இருக்கணும். அதனால் ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். 

சுத்தமாக குளித்த பின் ஈரமாக இருக்கும் தலைமுடியில் கிராம்பு நீரை பூச வேண்டும். அட இருங்கப்பா... கிராம்பு நீரை எப்படி செய்யணும்னு சொல்லனும்ல.. கிச்சனில் உள்ள டப்பாவில் நல்ல 10 கிராம்பு பொறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அரை கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிட்டு அதில் கிராம்புகளை தட்டி போடுங்கள். மிதமான சூட்டில் கிராம்பு சாறு இறங்கி வரும் வரை காத்திருங்கள். நிறம் மாறி வரும்போது அடுப்பை அணைத்து கிராம்பு நீரை மூடி வையுங்கள். ஆறிய பிறகு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றிவிடுங்கள். நம் கூந்தலுக்கு தேவையான கிராம்பு நீர் தயார்... இருங்க அடுத்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிஞ்சுக்கலாம். 

கிராம்பு போட்டு கொதிக்கவிட்டு ஆறவைத்த நீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்பிரே செய்து 15 நிமிடங்கள் ஆன பின் அலசி கொள்ளலாம். அல்லது குளித்துவிட்டு முடியை நன்கு காய வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு கிராம்பு நீரை ஸ்பிரே பண்ணிவிட்டு மறுநாள் தலைக்கு குளித்துவிடுங்கள். வாரம் இருமுறை செய்தாலும் முடிவளர்ச்சி பயங்கரமாக இருக்கும். நல்ல தூக்கமும் போஷாக்கான உணவும் எடுத்து கொள்ள வேண்டும். 

Latest Videos

click me!