காலைல வாக்கிங்கா? இந்த நேரத்துல போறதே பெஸ்ட்!! அற்புதமான '7' நன்மைகள்!! 

இரவு சாப்பிட்ட பின்னர் நடப்பதால் கிடைக்கும் ஏழு நன்மைகளை இந்தப் பதிவில் காணலாம்.

Walking benefits of post dinner in tamil mks

Health Benefits of Walking After Dinner : இரவு சாப்பாட்டிற்கு பின்னர் தூங்க செல்லாமல் 1000 காலடிகள் நடப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 1000 காலடிகள் என்பது 10 முதல் 15 நிமிடங்களில் எட்டக் கூடிய சிறிய இலக்குதான். இதனால் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மேம்பாடு, எடை கட்டுப்பாடு, மனச்சோர்வு குறையும் உள்ளிட்ட பல்வேறு அற்புத நன்மைகள் கிடைக்கின்றன. இரவில் சாப்பிட்ட பின் நடக்கும் இந்த எளிய பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவியாக இருக்கிறது. 

Walking benefits of post dinner in tamil mks
எடை குறைய!

 இரவு சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்வது கலோரிகளை குறைக்க உதவுகிறது. கொழுப்பு சேர்வதை குறைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் நீண்ட கால எடை கட்டுப்பாடாக இருக்கும்.  

மன அழுத்தம் குறையும்!  

நடைபயிற்சி செய்வதால் உடலில் மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்களை சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைத்து மனநலனை மேம்படுத்தும். 

இதையும் படிங்க:  இந்த '1' வாக்கிங் விதி போதும்.. ஒரு நோய் கூட கிட்ட வரமுடியாது!! 


நுரையீரல் ஆரோக்கியம்:

திறந்தவெளியில் அல்லது வீட்டு மாடியில் நடப்பது உடலுக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தும். நுரையீரல் திறன் மேம்பட நடைபயிற்சி உதவுகிறது. ஒட்டுமொத்த சுவாசமும் மேம்பட உதவுகிறது. 

மூட்டு ஆரோக்கியம்: 

இரவு சாப்பிட்டு மிதமான வேகத்தில் நடப்பதால்  விறைப்பு நீங்கும். மூட்டுகள் நன்கு இயங்க உதவுகிறது.  தசைகள் வலுப்படவும், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறையவும் உதவுகிறது. 

இதையும் படிங்க:  வெறும் 30 நிமிட வாக்கிங்!! வெளிப்படையாக தெரியாத 6 நன்மைகள்!! 

நிரீழிவு நோய்க்கு நல்லது!

இரவு சாப்பிட்டு நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இன்சுலின் ஸ்பைக் குறைவதற்கு சாப்பிட்டு நடப்பது உதவியாக இருக்கும். 

செரிமானம் மேம்படும்! 

இரவு சாப்பிட்ட பின் 1000 காலடிகள் நடப்பதால்  செரிமானம் மேம்படுகிறது.   வயிற்று உப்புசம், அசிடிட்டி,  அஜீரண கோளாறுகள் நீங்கும். குடல் ஆரோக்கியம் மேம்பட்டு ஊட்டச்சத்துக்களை நன்கு உறிஞ்ச சாப்பிட்ட பின் நடைபயிற்சி உதவுகிறது.

ஆயுள் அதிகரிக்கும்!

இரவு சாப்பிட்டு நடப்பதால்  ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட்டு ஆயுள் அதிகரிக்கிறது. தொடர்ந்து இரவு சாப்பிட்ட பின் நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் இதயம் வலுப்பெறுகிறது.  இரத்த ஓட்டம் சீராகும். கெட்ட  கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுடைய அபாயம் குறைகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!