சிலருக்கு பயணம் என்பது பிரச்சினை நிறைந்ததாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக பஸ் அல்லது காரில் பயணம் செய்பவர்களுக்கு. ஏனெனில், ஏனெனில் அவர்கள் கார் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும்போது வாந்தி, குமட்டல் எடுக்க தொடங்கும்.
கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை மோஷன் சிக்னஸ் எனப்படும். மேலும், இதற்கு சில முக்கிய காரணங்களும் உண்டு.
பயணத்தின்போது உடலில் ஏற்படும் சமநிலை பாதிப்பால் அவர்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், மயக்கம் வரும். சிலருக்கு, உடலில் பித்தநீர் அதிகம் இருக்கும் போது இந்த பிரச்சினைகள் வரும்.
எனவே, இந்த பிரச்சினைகள் வராமல் இருக்க பயணம் செய்வதற்கு முன்பு இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு அரைத்து, மோரில் கலந்து குடித்தால் வாந்தி, குமட்டல் வராது அல்லது உலர்ந்த நார்த்தங்காய் துண்டை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் குமட்டல் வராது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D