vendhayam or fenugreek benefits in tamil: கோடை காலம் தொடங்கிய நிலையில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாவதால் மக்கள் உணவு பழக்கத்தை மாற்றி வருகின்றனர். வெயில் நமக்கு உடல் சூட்டு பிரச்சனைகளான நீர்க்கடுப்பு, வயிற்று வலி, சரும நோய்கள் என அள்ளிக் கொடுத்து அவதியை கூட்டும். இப்படி உடல் சூட்டினால் வரும் பிரச்சனைகளை வெந்தயம் அசால்ட்டாக சமாளித்துவிடும். அதுமட்டுமா.. அது தவிர பல ஆரோக்கிய நன்மைகளையும் தரும். அதை எல்லாம் இங்கு முழுமையாக காணலாம்.
வெந்தயத்தில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள் அதனுடன் பல்வேறு கனிமச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மிகுந்துள்ளது. இதனை உண்பதால் செரிமானம் தொடங்கி சரும அழகு வரை பல நன்மைகளை பெறலாம்.
வெந்தய விதைகளை உண்பதால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வரும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்கும் என ஆய்வுகளே சொல்கின்றன. நிரூபிக்கப்பட்ட உண்மை. வெந்தயத்தில் இருக்கும் நாரின்ஜெனின் என்ற ப்ளேவோனாய்டுகள் தான் கெட்ட கொலஸ்ட்ராலை ஓட ஓட விரட்டுகின்றன.
வெந்தயம் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். நல்ல மலமிளக்கியாக செயல்படும். வெந்தயம் உண்பவர்களுக்கு வாய்வு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவை கிட்டவே வராது. ஏனென்றால் இந்த வெந்தய விதைகளில் இருக்கும் லூப்ரிகேட்டிங் பண்புகள் வயிறு, குடல்களில் தோன்றும் பிரச்சனைகளை தீர்த்துவிடுகிறது.
இதையும் படிங்க: eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
வெந்தயத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகியவை நம் உடலில் இருக்கும் வீக்கம், அழற்சியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலியோ, மூட்டு தொடர்பான பிரச்சினையோ வெந்தயத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டால், நல்ல மாற்றம் வரும். டைப்-2 நோயாளிகளை வைத்து செய்த ஆய்வில் அவர்களுக்கு வெந்தயத்தின் தாக்கம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது. இன்சுலின் எதிர்ப்பு குறைவது கூட அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் வீட்டு சமையல் அறையில் உள்ள வெந்தயத்தை காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனே வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக் கொள்ளுங்கள். உடனே தண்ணீரை மடமட குடித்தால் அன்றைய நாள் முழுவதும் உடலில் வெப்பம் அதிகரிக்காது. இதைவிட சிறப்பான பலன்களைப் பெற நினைத்தால் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். தினமும் வெந்தயத்தை இப்படி எடுத்துக் கொண்டால் ரொம்ப நல்லது.