இந்தியாவின் பாரம்பரியான உணவுகளில் ஒன்று பால். அதன்மூலம் கிடைக்கும் ஒவ்வொரு பொருளுமே நாம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். அதுபோல தான் நெய்யும். அதனுடைய பயன்பாடு என்பது இந்தியாவின் தொன்மைகளுள் ஒன்றாகும். எந்த உணவிலும் நெய் சேர்க்கலாம். அது உணவின் சுவை மற்றும் மணம் இரண்டையும் அதிகரிக்கும்.
மேலும் நெய்யில் குறிப்பிட்ட சில மருத்துவ குணங்களும் உள்ளன. இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, நெய்யை ஒரு சூப்பர் உணவு என்றே சொல்லலாம். ஆனால் சிலர் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது என்று கூறுகின்றனர். ஏனெனில் இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம். இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
நெய்யில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள், சிறிய அளவிலான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இருப்பினும், இதில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கம் அதிகம். இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடுகள் தேவை.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நிறைவுற்ற கொழுப்பு சிலருக்கு கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்றாலும், சில ஆராய்ச்சிகள் நிறைவுற்ற கொழுப்புகளை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுடன் மாற்றுவது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது. நெய்யில் இணைந்த லினோலிக் அமிலமும் (CLA) உள்ளது. இது உடல் வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
அரிசியை பாதுகாக்கும் இலவங்கம், பட்டை மற்றும் கிராம்பு..!!
நெய் லாக்டோஸ் இல்லாதது. அதை தெளிய வைக்கும் போது, பால் திடப்பொருட்கள் அகற்றப்படுவதே இதற்குக் காரணம். இதன்மூலம் நெய்யில் லாக்டோஸ் மற்றும் கேசீ நீக்கப்படுகிறது. உங்களுக்கு கடுமையாக லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்ன நெய்யை சாப்பிடுங்கள்.
நெய்யை அதிகளவு சேமித்து வைக்கலாம். அவ்வளவு சீக்கிரம் கெட்டுவிடாது. குறிப்பாக சரியாக சேமிக்கப்படும் போது. நெய் நீண்ட காலம் வரும். சூரிய ஒளியில் படக்கூடாது, காற்று வீசக் கூடாது போன்ற பக்குவங்கள் நெய் பராமரிப்பில் கண்டிப்பாக தேவைப்படுகிறது. எப்போதும் நெய்யை அறை வெப்பநிலையில் வைக்கவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் சீக்கரம் கெட்டுப் போகும்.