இனி துக்கத்தை அடக்கி வைக்க வேண்டாம்- அழுது கொட்டித் தீர்த்துவிடுங்கள்..!!

Published : Feb 26, 2023, 05:48 PM IST

உள்ளுக்குள் எவ்வளவு துக்கமிருந்தாலும், பெரும்பாலானோர் அதை தொண்டைக்குள் வைத்து விழுங்கிவிடுங்கின்றனர். ஆனால் மனம் விட்டு அழுவதால், நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  

PREV
16
இனி துக்கத்தை அடக்கி வைக்க வேண்டாம்- அழுது கொட்டித் தீர்த்துவிடுங்கள்..!!

சிரிப்பு, கோபம், மகிழ்ச்சி, வேதனை போன்று அழுகையும் ஒரு இயல்பான உணர்வுநிலை தான். ஆனால் அதை பொதுவெளியில் வெளிப்படுத்த பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு, பிறர் பார்க்கும்படியாக அழுதுவிட்டால், தன்னை பலவீனமானவர் என்று எண்ணவிடக்கூடும் என்கிற புரிதல் தான் காரணம். அதுமட்டுமில்லாமல் அழுமூஞ்சி, அழுவாச்சி போன்ற பெயர்கள் வந்துவிடலாம் என்று நினைப்பவர்களும் பலர் உண்டு.
 

26
tears

எனினும், தற்போதைய காலத்தில் இந்த நிலை மாறி வருகிறது. பல்வேறு படங்களில் ஹீரோயின்களை விடவும் ஹீரோக்கள் அழுகின்றனர். தோல்வியை தழுவும் போது வில்லன்கள் அழுகின்றனர். அதை மிகைப்படுத்தி காட்டாமல், மிகவும் எதார்த்த நிலையில் இருந்து வெளிப்படுத்துகின்றனர். இதன்காரணமாக ஹீரோக்களுக்கும் அழுகை வரும். சமூகத்தில் ஆண்களும் அழுவார்கள் என்கிற கருத்து உருவாகி வருகிறது.

36

மிகவும் துக்கமான விஷயம் அல்லது சங்கடம் ஏற்பட்டால், அழுவது என்பது அருமருந்தாகும். அதனால் ஏற்படும் ஆற்றாமையை அழுவதனால் மட்டுமே கடத்த முடியும். மேலும், துக்கம் தொண்டையை அடைக்கும் போது, அதை வெளிப்படுத்தாமல் இருந்தால் உடல்நிலை தான் பாதிக்கப்படும். அதை தடுக்க மனம் விட்டு  அழுவது என்பது உடலுக்கு ஆரோக்கியமாக அமையும்.
 

46
Image Credit: Twitter

ஒரு சராசரியான மனிதனுக்கு பல்வேறு வகையில் இன்னல்கள் ஏற்படும். குடும்பம், வேலை, பணிச்சுமை, சுற்றுச்சூழல் என, எதுவேண்டுமானாலும் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். இதை போக்குவதற்கு அழுகை ஒன்று தான் நல்ல தீர்வாகும். இதுதெரியாமல் நான் அழ மாட்டேன், பலவீனமான நபர் இல்லை என்கிற எண்ணத்தில் இருந்தால், உங்களுக்கு மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் தான் ஏற்படும். 

56

நாம் அழும்போது, கண்ணீரில் இருந்து எண்டார்ஃபின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் வெளியாகின்றன. இதனால் மனதிலுள்ள வேதனை குறைந்து, துக்கத்தையும் கஷ்டத்தையும் மனம் ஏற்றுக்கொள்ள பழகுகிறது. அதை தொடர்ந்து ஆசுவாசம் அடைந்து, மனம் சகஜ நிலைக்கு மாறுகிறது. ஒவ்வொரு முறையும் துக்கம் தொண்டையை அடைக்கையில் கண்ணீர் வந்தால், அடுத்த நிமிடமே மனம் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். 

66

இன்றைய மாசு நிறைந்த உலகில் வெளியே செல்லும் போது, அலுவலகங்களுக்காக பயணிக்கும் போது தூசி மற்றும் துகள் போன்றவை கண்களில் விழும். இதை வெளியேற்றுவது சற்று சிரமம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் அழும் போது, கண்களுக்குள் இருக்கும் எல்லாவிதமான அழுக்கு, தூசி மற்றும் துகள் போன்றவை வெளியேறிவிடும். 

பிறந்த குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், அது நன்றாக கத்தி அழும். இதன்மூலம் குழந்தையின் நுரையீறல் புறவாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறிவிடும். அதற்கு அழுகை தான் பெரிதும் உதவக்கூடிய செயல்பாடாகும். கண்களில் இருந்து வரும் கண்ணீரில் புரதம் உள்ளது. இது நியூரான்களில் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒன்றாகும். 

அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

எப்படிப்பட்ட தூக்கமிருந்தாலும் நாம் மனம் விட்டு அழுதுவிட்டால், நரம்பு மண்டலத்தில் ஒரு விளைவு ஏற்பட்டு, அது உடலுக்கு ஓய்வை தரும். இதையடுத்து மனமும் அமைதி அடையும். நாம் சிந்தும் கண்ணீரில் இதையும் கடந்து பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. அதனால் அழுகையை இனிமேல் பலவீனமாக கருத வேண்டாம். அழுகை இயல்பான ஒன்று தான். அதை எப்போதும் இயற்கைக்கு மாறாக பார்க்கக்கூடாது.
 

click me!

Recommended Stories