எரிச்சலை உண்டாக்கும் வியர்க்குரு
பொதுவாக கோடைகாலத்தில், வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரைக்குமே பிரச்சனையாகத் தான் இருக்கும். வியர்க்குரு வந்து விட்டால், அது சருமத்தை ஊசியால் குத்துவது போல் இருப்பது மட்டுமன்றி, எரிச்சலையும் தரும். வியர்க்குரு வந்தால், உடல் முழுவதிலும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறி விடும். சிலருக்கு முகத்திலும் வியர்க்குரு வரும். அச்சமயங்களில், அவர்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காட்டுவார்கள்.
வியர்க்குருவைப் போக்க கடைகளில் விற்கும் பவுடர் மற்றும் கிரீம் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படி பணத்தை வீணாக்காமல் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் வெயிலிலும், வியர்க்குருவிலும் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இருப்பினும் பலரும் காய்கறிகளை சரியான அளவில் சாப்பிட மாட்டார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு வியர்க்குருவை விரட்ட உதவும் சூப்பரான ஒரு டிப்ஸைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் துண்டுகள் - 5
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை
வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி அதனை நன்றாக மசித்து எடுக்க வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல்லைக் கலந்து, நன்றாக குழைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் படும்படி தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு இந்த மாஸ்க் காய்ந்ததும், குளிர்ச்சியான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். தினந்தோறும் ஒரு வேளை மட்டும் இதனைச் செய்தால் போதும்.
hot Summer
வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவதும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதனால், வெயிலில் இருந்து பாதுகாப்பு மட்டுமின்றி, நம் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்தந்த காலநிலையில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்த் தாக்குதல் எதுவுமே இருக்காது.
சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!
பக்கவிளைவுகள் உண்டா?
கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, சருமத்தில் ஒரு பேட்ச் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் பக்கவிளைவைகளை உண்டு செய்யாது. அனைவருமே இதனைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்த வேண்டும்.