பிரசவிக்கும் பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் வருகிறது. முக்கியமாக யோனி தளர்ச்சி அடைகிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அறுவைசிகிச்சை இல்லாமலும் பெண்களின் யோனியை புதுப்பிக்க முடியும். பலருக்கு, அறுவைசிகிச்சை இல்லாமல் யோனி இறுகும்போது பாலியல் இன்பத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது.
யோனியை புத்துணர்ச்சி {Vaginal Rejuvenation} அடைய செய்ய சில வழிகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல் யோனியை இறுக செய்வது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் (புதுடெல்லி) புற்றுநோயியல் மற்றும் ரோபோட்டிக் மகப்பேறு மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் சரிகா குப்தா சொல்வதை கேட்டால் உங்களுக்கே புரியும். இந்த சிகிச்சையை செய்வதால் சில பிரச்சனைகள் குறைகின்றன.
•பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது
• சிறுநீர் கட்டுப்பாடு குறைந்து போதல்
• பாலியல் ஈடுபாடு குறைவது
• வறண்ட பிறப்புறுப்பு பகுதி
• உடலுறவின் கொள்ளும் போது வலி
• பாலியல் திருப்தி, பாலுணர்வு குறைதல்
இந்த பிரச்சனைகளை யோனியின் புத்துணர்வு சிகிச்சை தீர்க்கிறது.
லேசர் சிகிச்சை (CO2 laser treatment)
இந்த சிகிச்சையில் லேசர் யோனியின் மேல் அடுக்குகளில் உள்ள திசுக்களை வெப்பம் அடைய செய்யும். யோனியின் கீழ் அடுக்குகளில் உள்ள திசுக்களில் அதிக கொலாஜன் உற்பத்தியைத் தூண்டிவிடும். இதனால் சருமம் இறுக்கமாகிறது. இந்த சிகிச்சைக்கு பின் நீங்கள் செக்ஸ் அதிகமாக அனுபவிக்க முடியும்.
சிகிச்சை விவரம்
இந்த சிகிச்சைகளை பெரும்பாலும் பிரசவத்திற்குப் பின் செய்து கொள்ளலாம். ஆனால் எந்த வயதிலும் செய்யலாம், யார் வேண்டுமானாலும் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சிகிச்சையில் சுமார் 3 முதல் 4 வாரங்களுக்குப் பிறகு வழக்கமான அமர்வுகள் தேவைப்படும். இதற்கு 4 முதல் 6 சிகிச்சை அமர்வுகள் உண்டு. ஏனெனில் இந்த செயல்முறையில் உங்களுக்கு பராமரிப்பு சிகிச்சை தேவைப்படலாம்.
இதையும் படிங்க: இந்த 'எழுத்துக்களில்' உங்க மனைவி பெயர் ஆரம்பிக்குதா? இந்த பெண்களின் கணவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்..
பக்க விளைவுகள்
அறுவைசிகிச்சை அல்லாத பிறப்புறுப்பு புத்துணர்வு சிகிச்சையில் பக்க விளைவுகள் கிடையாது. ஆனால் சில பெண்களுக்கு லேசான அரிப்பு அல்லது வலி ஏற்படலாம். இதில் நல்ல விஷயம் என்னவெனில் இந்த அறிகுறிகள் நீண்ட நாள் இருக்காது. ஆகவே பிரசவத்திற்கு பின் சிறந்த செக்ஸ் வாழ்க்கைக்கு அறுவைசிகிச்சை அல்லாத பிறப்புறுப்பு புத்துணர்ச்சி சிகிச்சையை முயற்சிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.