
தற்போதைய காலத்தில் மக்கள் பலரும் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர் என்ன நோய்க்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருக்கிறது ஆனால் இது எதுவுமே தெரியாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது நமக்கு கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் குறிப்பாக சில மருந்துகள் இதயத்தில் அமைதியாக சேதத்தை ஏற்படுத்தி இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம். அத்தகைய சில மருந்துகள் குறித்து இதய நோய் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர் அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இபுப்ரூஃபன் (Ibuprofen), நாப்ராக்ஸன் (Naproxen) போன்ற மருந்துகளை நீண்ட நாட்களாக உட்கொள்வது இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு பக்கவாதம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் ஏற்கனவே இதய பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்துகளை மிகவும் கவனமாக பயன்படுத்துதல் வேண்டும். ஏற்கனவே இதயம் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் உங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறி உங்கள் ரத்த பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டியது அவசியம்.
சளி மற்றும் இருமல் மருந்துகளில் உள்ள சில பொருட்கள் ரத்த குழாய்களை சுருங்கச் செய்து ரத்த அழுத்தத்தை வெறுத்தலாம் குறிப்பாக சளி மருந்துகளில் சளி நீக்கும் டிகோங்கஸ்டென்ட்கள் (Decongestants) என்கிற பொருள் உள்ளது இது ரத்தக்குழாயை சுருங்கச் செய்து இதய பாதிப்பை அதிகரிக்கிறது இதய நோய் உள்ளவர்கள் இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அது மேலும் சிக்கல்களை உருவாக்கலாம் எனவே சளி அல்லது இருமல் மருந்துகளை சுயமாக வாங்கி உபயோகப்படுத்துதல் கூடாது இதய பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பின்னர் இந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டியது அவசியம்.
முன்பு சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரோஸிகிளிடாசோன் (Rosiglitazone) போன்ற மருந்துகள் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற முன்பு சர்க்கரை நோய்க்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகள் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பது கண்டது ஏற்பட்டது இவை சர்க்கரையை நிர்வகிக்க உதவினாலும் இதயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது தெரிய வந்தது. நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் நீரிழிவு மருந்துகள் பாதுகாப்பானவை. எனவே சர்க்கரை நோயாளிகள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது ஹீமோதெரபி சில வகையான ஹீமோதெரபி மருந்துகள் அல்லது குறிப்பிட்ட இலக்கு மருந்துகள் இதய தசைகளை பலவீனப்படுத்துகின்றன அல்லது இதயம் செயலிழப்புக்கு வழிபடுகின்றன குறிப்பாக டாக்ஸோரூபிகின், டிராஸ்டுஜுமாப் போன்ற கீமோதெரபி மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் பொழுது அது இதயத்தை பலவீனப்படுத்துவதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புற்று நோய்க்காக தொடர்ந்து கீமோதெரபி அல்லது குறிப்பிட்ட இலக்கு மருந்துகளை பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இதய பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். புற்றுநோயாளிகள் சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் இதயம் சம்பந்தமான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
மனநல பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளும் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் (Antidepressants) மனநோய் எதிர்ப்பு மருந்துகள் (Antipsychotics) ஆகியவை இதயத்துடிப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அரித்மியா - Arrhythmia சிலருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த மருந்துகளை உட்கொள்ளும் பொழுது மயக்கம், படபடப்பு போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பின்குறிப்பு: மேலே குறிப்பிட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது இதய நோய் நிபுணர்கள் வெளியிட்ட வீடியோக்கள் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவல்களாகும். இதற்கு ஏசியா நெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. நீங்கள் எந்த ஒரு மருந்தையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு அல்லது நிறுத்துவதற்கு முன்பு கட்டாயம் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். மருத்துவர் மட்டுமே உங்கள் உடல் நிலையைப் பொறுத்து சரியான பரிந்துரைகளை வழங்க முடியும். இதய ஆரோக்கியம் குறித்து மேலும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.