Uric Acid : யூரிக் அமிலத்தை குறைக்கும் பாகற்காய்!! எப்போது, எப்படி சாப்பிடணும்?

Published : Jul 09, 2025, 10:06 AM IST

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதை குறைக்க பாகற்காயை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
15

யூரி அமிலம் என்பது உடலில் உண்டாகும் கழிவாகும். இதன் அளவு அதிகமானால் மூட்டு வலி, சிறுநீரக கற்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை சரியான நேரத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்துவது ரொம்பவே முக்கியம். ஆனால் இந்த காலத்தில் பெரும்பாலானோர் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். உடலில் பியூரின் உடைந்து யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது ரத்தத்தின் மூலமாக சிறுநீரகங்களையும் அடையும்.

25

யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக தான் உடலில் இருந்து வெளியேறும். ஒருவேளை அது வெளியேறவில்லை என்றால் அதன் அளவு உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக தான் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் உட்காருவது, எழுவது சிரமமாக இருக்கும்.

35

இத்தகைய சூழ்நிலையில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க இயற்கை நமக்கு அளித்த அற்புதமான காய்கறிகளில் ஒன்று தான் பாகற்காய். ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு யூரிக் அமிலத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

45

பாகற்காயில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன எதிர்த்து போராட பெரிதும் உதவும். பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

55

யூரிக் அமிலத்தை குறைக்க பாகற்காயை எப்படி சாப்பிடணும்?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை கப் பாகற்காயை ஜூஸ் குடித்து வந்தால் யூரிக் அமிலத்தை குறைத்து விடலாம். பாற்காயின் கசப்பை போக்க அதில் சிறிதளவு கருப்பு உறுப்பு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். மூட்டு வலி, கீழ்வாதத்திற்கு மிகவும் நன்மை பாய்க்கும். கூடுதலாக பாகற்காயை காய்கறிகளாக சமைத்து சாப்பிடலாம்.

குறிப்பு : பாகற்காய் நல்லது என்றாலும், உங்களுக்கு சர்க்கரை நோய், யூரிக் அமில பிரச்சனை இருந்தால் மருத்துவமனிடம் ஆலோசித்த பிறகு தினமும் எவ்வளவு பாகற்காய் உணவில் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories