அதிக உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது:
உடற்பயிற்சி மேற்கொள்வது உடலில் கொழுப்பை கரைத்து , வளர்சிதை மாற்றத்தை தடுத்து உடலை மெலிதாக வைத்து கொள்ள உதவும். ஆனால், பெரும்பாலான மக்கள், இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், தொடக்கத்திலேயே அதிகமாக
உடற்பயிற்சி செய்யத் தொடங்குவார்கள்.
அதிகப்படியான உடற்பயிற்சி நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, இது எண்டோகிரைன் ஹார்மோன்களை எதிர்மறையாக பாதிக்கலாம் என்கின்றது ஆய்வு முடிவுகள். எனவே, புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும்