இந்த ஆய்வுக்காக காபி அருந்தும் 495,585 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டன. இவர்கள் சராசரியாக 10.7 ஆண்டுகளுக்கும் மேல் கண்காணிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாள்பட்ட கல்லீரல் நோய், அதன் தொடர்புடைய கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது. இத ஆய்வில் சுமார் 78% பேர் (384,818) ஏதேனும் ஒரு வகை காபியை குடித்தவர்கள். மீதம் 22% பேர் (109,767) காபி அருந்துவதில்லை. இந்த ஆய்வில் 3,600 நாள்பட்ட கல்லீரல் நோய்கள் பதிவாகின. இதில் 301 பேரின் மரணமும் அடங்கும். இது தவிர 5,439 பேருக்கு கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய், கல்லீரல் புற்றுநோய் 184 பேருக்கும் பதிவாகின.