Stomach Cancer : காலை இந்த 5 அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க! இந்த புற்று நோய்க்கு வாய்ப்பு

Published : Jun 28, 2025, 11:33 AM IST

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
15
வயிற்றுப் புற்றுநோய்

புற்றுநோய் என்பது ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய ஒரு தீவிரமான நோயாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வயிற்று புற்றுநோய். உலக புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 5வது பொதுவான புற்றுநோய் வயிற்றுப் புற்றுநோய் தான். இந்த புற்றுநோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அதுவும் குறிப்பாக 60 வயதுக்கு இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. முக்கியமாக பீடி, சிகரெட் குடிப்பவர்கள் மற்றும் பரம்பரை பரம்பரையாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். வயிற்றுப் புற்றுநோய் மிகக் கொடிய நோய். ஆனால் ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். வயிற்றுப் புற்று நோய்க்கான அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும், தீவிரமடைந்தால் நிலைமையை மோசமாக்கி விடும். சரி இப்போது வயிற்று புற்று நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

25
வயிற்றுப் புற்றுநோய் அறிகுறிகள்

1. பசியின்மை;

வயிற்று புற்று நோயின் முதல் அறிகுறி இதுதான். ஒரு நபர் வழக்கத்தை விட குறைவாக சாப்பிட தொடங்கினால், அதன் விளைவு அவரது எடையில் தெரிந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து பசியின்மையை உணர்ந்தாலோ அல்லது சிறிதளவு மட்டுமே சாப்பிட்டு போதுமானதாக உணர்ந்தாலோ அதை ஒருபோதும் அலட்சியப்படுத்த வேண்டாம். ஏனெனில் அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

2. வயிற்று வலி :

வயிற்று வலியை ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் அந்த வலி நீடித்தாலோ அல்லது மிகவும் அதிகரித்தாலோ அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாகும். இது தவிர தொடர்ந்து ஏதோ அசெளகரியமாக உணர்ந்தாலும் இந்த புற்றுநோயின் அறிகுறி தான்.

35
3. தீவிர சோர்வு மற்றும் பலவீனம் :

எந்தவித காரணமும் இல்லாமல் தீவிரல் சோர்பு மற்றும் பலவீனமாக நீங்கள் உணர்ந்தால் அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் உடலில் புற்று செல்லுங்கள் வளரும்போது இந்த அறிகுறிகள் தெரியும். நீங்கள் ஒவ்வொரு நாளும் சோர்வாக உணர்ந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

4. காரணமில்லாமல் எடை குறைதல்:

எந்தவித காரணமும் இல்லாமல் உங்களது எடை குறைந்து கொண்டே இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது கூட வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்று நோய் இருக்கும்போது உணவு சரியாக ஜீரணமாகாது மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இதனால் எடை குறைய ஆரம்பிக்கும்.

45
5. செரிமான பிரச்சனைகள் :

நீங்கள் தொடர்ந்து வாயு, வீக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை அனுபவித்தால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம். ஏனெனில் இவை வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

55
பிற அறிகுறிகள் :

- தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தியும் வயிற்றுப் புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும்.

- நீங்கள் சாப்பிடும் உணவை விழுங்குவதில் சிரமமாக உணர்ந்தால் அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறி.

- மலம் கருப்பு நிறத்தில் வெளியேறுவது அல்லது ரத்தம் கலந்து வருவது வயிற்று புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்றாகும்.

- சில சமயங்களில் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் வீரமாக மாறுதல் வயிற்றுப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

குறிப்பு : மேலே சொன்ன அறிகுறிகள் வேறு சில காரணங்களாலும் ஏற்பட்டாலும், இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுவது தான் உங்களுக்கு நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories