1. செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும் :
லெமன் டீயில் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் இது உடலில் செரிமான செயல் முறையை மெதுவாக்குவது மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல், வீக்கம், மலச்சிக்கல், அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளையும் தூண்டும்.
2. நீரிழப்பு ஏற்படும் :
லெமன் டீ யில் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அது உடலின் அமிலத்தின் அளவை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும். அதுமட்டுமின்றி நீரிழப்பையும் ஏற்படுத்தும். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும்.
3. பல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் :
எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தின் அளவு பற்களின் பற்சிப்பியை மோசமாக பாதிக்கும். அமிலத்தின் அளவு அதிகரிப்பின் காரணமாக பல் அரிப்பு ஏற்பட்டு, விரைவில் பல் உடைந்து விடும்.