health
பால் டீயை விட லெமன் டீ ரொம்பவே நல்லது. ஆனால் சிலர் அது குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யாரெல்லாம் இன்று இங்கு பார்க்கலாம்.
புளிப்பு உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் லெமன் டீ குடிக்கவே கூடாது. மீறினால் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் லெமன் டீ குடிக்கவே கூடாது. மீறினால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் நம்ம டீ குடிக்கவே கூடாது. அது தலைவலியை மேலும் அதிகரிக்க செய்யும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவு உள்ளதால் உங்களுக்கு சொத்தைப்பல் அல்லது பிற பல் பிரச்சனை இருந்தால் லெமன் டீ குடிக்க கூடாது. மீறினால் பற்களின் எனாமல் பெரிதும் சேதமடையும்.
சர்க்கரை நோய், உயரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால் லெமன் டீ குடிக்க வேண்டாம். மீறினால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.