health
நீங்கள் தவறான அளவில் பிரா அணிந்தால் மார்பு வலியை ஏற்படுத்தும். இதனுடன் அடிக்கடி அசெளகரியமாக உணர்ந்தால் பிரா அளவை மாற்றவும்.
உங்கள் மார்பு அளவை விட சின்னதாக பிரா அணிந்தால் மார்பகங்களில் அரிப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
சின்ன பிரா அணிவதன் காரணமாக மார்பகத்தில் காற்று செல்லாது. இதன் விளைவாக மார்பகங்களில் பூஞ்சை தொற்று பிரச்சினையை ஏற்படுத்தும்.
சின்ன பிரா அணிவதால் மார்பகம் மற்றும் மார்பு பகுதியில் இரத்தம் ஓட்டம் பாதிக்கப்படும். இதன் விளைவாக உடலில் வேறு பல பிரச்சினைகள் ஏற்படும்.
சிறிய பிரா அணிவதால் உடல் வெப்பம், வியர்வை பிரச்சினையை ஏற்படுத்தும். வியர்வை பூஞ்சை வளர்ச்சி அபாயத்தை அதிகரித்து, மார்பகங்களில் பூஞ்சை தொற்று பிரச்சினையை ஏற்படுத்தும்.
சிறிய அளவில் பிரா அணிந்தால் மார்பு மற்றும் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
மார்பு அளவை விட சிறிய அளவில் பிரா அணிந்தால் தோள்பட்டையில் அழுத்தத்துடன் கூடிய வலியை ஏற்படுத்தும். இதனால் தழும்புகளும் வரும்.