health
பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஹாட் டாக்ஸ், பேக்கன், சில சாசேஜ்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூட்டுப்பொருட்கள் உள்ளன.
சிவப்பு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 17 சதவீதம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மது அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். மது அருந்துபவர்களில் வாய், தொண்டை, கல்லீரல் ஆகிய புற்றுநோய்கள் பொதுவாக காணப்படுகின்றன.
அதிக இனிப்பு மற்றும் பிற இரசாயனப் பொருட்கள் அடங்கியுள்ள கோலாக்கள், புற்றுநோயை உண்டாக்கும் பானமாகும்.
புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்று புகைபிடித்தல். புகையிலை பயன்பாடு நுரையீரல், வாய், தொண்டை ஆகிய இடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியின்மை மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், எண்டோமெட்ரியல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களின் அதிக ஆபத்துடன் தொடர்புடையது.
அதிகமாக சூரிய ஒளியில் இருப்பது மெலனோமா உட்பட தோல் புற்றுநோய்க்கு காரணமாகும்.