அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!

First Published | Apr 19, 2023, 7:45 AM IST

ஸ்ப்ரிங் ஆனியன் எனும் வெங்காயத்தாள் உண்பதால் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

பொதுவாக வெங்காயத்தாள் என இதனை யாரும் சொல்வதில்லை. ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onion) என்பது தான் பரவலாக சொல்லப்படும் பெயர். இது உணவுக்கு சுவையூட்டும் என்பதால், மக்கள் ஆர்வமாக வாங்குவார்கள். ஆனால் உணவுக்கு சுவை மட்டுமல்ல, நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்கக் கூடியது இந்த வெங்காயத்தாள். 

வெங்காயத்தாளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஜலதோஷம், காய்ச்சலுக்கு எதிராக போராட உதவும். 

சத்துக்கள் 

வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் அதிகமாக காணப்படுகின்றன. 

Tap to resize

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சரிசமமாக எடுத்து அரைத்துச் உண்டால் ரத்த மூலம் குணமாகும். வெங்காயத்தாளில் இருக்கும் பொட்டாசியம் நம்முடைய இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் இதய நோய் அபாயம் குறையும். 

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் என்ற தாதுவானது சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்குமாம். அதுமட்டுமில்லை இதில் காணப்படும் புரோப்பைல் டை சல்பேட்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள பெக்டின் என்ற பொருள் பெங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைத்து ஆயுளை நீட்டிக்கிறது. 

இதையும் படிங்க: இரவில் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் ஆஸ்துமா!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வெங்காயத்தாள் சிறந்த உணவாக உள்ளது. வெங்காயத்தாள் உண்பதால் கண் தொடர்பான பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

Latest Videos

click me!