கழிப்பறையில் மொபைல் பயன்படுத்துவதால் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதெப்படி என கேள்வி எழுகிறதா? நம் வீட்டு கழிவறையில் தீமை செய்யும் கொடிய நோய்க்கிருமிகள் காணப்படுகின்றன. கழிப்பறை இருக்கைகள் தான் பல வகையான கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. டாய்லெட் இருக்கையில் உட்காந்து மொபைலௌ நோண்டுவதால் அங்கு நம் கைகளில் படியும் பல கிருமிகளை கவனிக்காமல் விடுகிறோம். அந்த கையை வாய், கண்கள், மூக்கில் வைப்பதால் அவை உடலுக்குள் செல்ல நேர்கிறது. ஆய்வுகளின்படி, கழிவறையில் உள்ள கிருமிகள் நம் மொபைல் ஃபோன் திரைகளில் 28 நாட்கள் வரை உயிரோடிக்கும் என சொல்லப்படுகிறது.
உண்மையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட 10 மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொதுவாக கழிப்பறை இருக்கையில் உள்ள கிருமிகள் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பவை ஆகும். இவை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. கழிப்பறை இருக்கையில் ஈ.கோலி (E.coli), என்டோரோகோகஸ் (Enterococcus), சால்மோனெல்லா(salmonella), ஷிகெல்லா (shigella), கேம்பிலோபாக்டர் (campylobacter) ஆகிய பாதிப்பு உண்டாக்கும் நோய்க்கிருமிகள் உள்ளன. நீங்கள் கழிவறைக்கு மொபைல் கொண்டு செல்லும்போது இந்த கிருமிகளையும் உடன் அழைத்து வரும் வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கழிப்பறை இருக்கையில் ரொம்ப நேரம் உட்காருவது, மலக்குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். இது மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெகுநேரம் கழிவறையில் இருந்தால் "ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் அழுத்தத்தின் கீழ் நீண்டு, வீக்கம் ஏற்படலாம்". இந்த பாதிப்புகளை தவிர்க்க கழிவறையில் மொபைல் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும். மொபைல் போனின் தொடுதிரையை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!! அதுவும் எதில் கலந்து கொடுத்தார் தெரியுமா?