கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

First Published | Apr 18, 2023, 7:43 AM IST

பலாப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். வயிற்று பிரச்சனைகள் குறையும். தோல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இந்த பழத்தை கோடையில் சாப்பிடுவது நல்லதா? வாங்க பார்க்கலாம். 

பலாப்பழம் தித்திப்பான சுவை கொண்டது. இதனை உண்பதால் செரிமான கோளாறுகள் குணமாகி மலச்சிக்கல் தீரும். பலாப்பழத்தை சிலர் காய் பருவத்தில் எடுத்து, சமைக்கவும் பயன்படுத்துவார்கள். ஆனால் கோடைகாலங்களில் பலாப்பழம் உண்பது உடலுக்கு உஷ்ணத்தை அதிகரிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையா? பலாப்பழத்தை கோடை காலத்தில் உண்ணலாமா? அதன் எண்ணற்ற நன்மைகள் என்னவென என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் செய்த ஒரு ஆய்வின்படி.. பலாப் பழத்தில் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதில் ரிபோஃப்ளேவின், தியாமின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி ஆகியவையும் உள்ளன. 

Tap to resize

கோடைகாலத்தில் பலாப்பழம்!! 

பொதுவாக பலாப்பழம் சூடான, ஈரப்பதமான காலநிலையில் செழித்து வளரும். சில பெண்கள் கோடையில் பலாப்பழத்தை தவிர்ப்பார்கள். ஏனென்றால் இது வயிற்றில் வெப்பத்தை உருவாக்கி, முகப்பரு, பிற தோல் பிரச்சனைகளை உருவாக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கருத்துகளின் படி, பலாப்பழம் உடலில் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யாது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இளமையாக வைத்திருக்கும். ஆகவே இந்த பழத்தை கோடைகாலத்திலும் தாராளமாக சாப்பிடலாம். பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

நல்ல பாக்டீரியா!! 

பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் போல் செயல்பட்டு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பை சீராக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. 

இதையும் படிங்க: இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!

இதய ஆரோக்கியம்!! 

குறிப்பாக பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயராமல் தடுக்கிறது. இதனுடன், பலாவில் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பழம் மிகவும் நல்லது. பலாப் பழத்தில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயத்தை பாதுகாக்கிறது. 

புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்!! 

ஐசோஃப்ளேவோன்ஸ், லிக்னான்கள், சபோனின்கள் உள்ளிட்ட பல்வேறு பைட்டோநியூட்ரியன்கள் பலாப்பழத்தில் உள்ளன. இது இரத்த அழுத்த எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, அல்சர், வயதாவதை தடுக்கும் (antiaging) பண்புகளையும் கொண்டுள்ளது. உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. இது வயிற்றுப் புண்களையும் குறைக்கிறது. 

இதையும் படிங்க: உடற்பயிற்சி செய்யும் போது இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க! காலை, மாலை எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யணும்?

Latest Videos

click me!