இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து டிராகன் பழத்தை (Dragon Fruit)அடிக்கடி சாப்பிட சொல்கிறார்கள். ஏனென்றால் இதை உண்ணும்போது இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடியது. அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டால் பல நோய்களுக்கு காரணமாகிவிடும். இதனால் நம்முடைய நரம்புகளில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். தொடர்ந்து உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும். அதை கட்டுக்குள் வைக்க டிராகன் பழம் நல்ல பழன் தரும். டிராகன் பழத்தை உண்பதால் இன்னும் நிறைய பலன்கள் கூட கிடைக்கின்றன.
டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
டிராகன் பழத்தின் சுவை அற்புதமானது. இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இது தவிர, ஆக்ஸிஜனேற்றிகள், கரோட்டின், புரதங்கள், தியாமின், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கூட அதிகம் உள்ளன.
டிராகன் பழத்தின் நன்மைகள்
கொலஸ்ட்ரால் குறையும்
டிராகன் பழத்தை சும்மா நினைத்துவிட வேண்டாம். இதில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3, ஒமேகா-6 ஆகிய கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதனால்தான் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட பரிந்துரைக்கின்றன நிபுணர்கள்.
நீரிழிவு நோய்க்கு நல்லது
சர்க்கரை நோயாளிகள் டிராகன் பழத்தை உண்பது நல்லது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதில் காணப்படும் பாலிஃபீனால்கள், தியோல்கள், கரோட்டினாய்டுகள், குளுக்கோசினோலேட்டுகள் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இந்த பழம் அதிக நார்ச்சத்து கொண்டது. இது சாப்பிட்ட பின்னர் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.
இதையும் படிங்க: பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?