வெற்றிலையை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்! தலைமுடி முதல் உடல் முழுக்க, 1 வெற்றிலையால் இத்தனை நன்மைகள்!

First Published | Apr 15, 2023, 7:45 AM IST

 Vetrilai Benefits in Tamil: வெற்றிலையை உண்ணும்போது அதனால் பல மருத்துவ நன்மைகளை நம் உடல் பெறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

வெற்றிலையை (Betle Leaves) எல்லா வீட்டு விசேஷங்களிலும் வைத்திருப்பார்கள். அதை பாக்கு, சுண்ணாம்புடன் சாப்பிட்டால் வாய் சிவக்கும் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவ நன்மைகளை குறித்து பலர் அறிந்திருக்கமாட்டார்கள். வெற்றிலையால் தலைமுடி முதல் உடல் துர்நாற்றம் வரை பல பிரச்சனைகளை மொத்தமாக சரி செய்ய முடியும். அது எப்படி என்பதை இங்கு காணலாம். 

வாய் துர்நாற்றம் 

வாய் துர்நாற்றம் பலருக்கும் இருக்கும் பிரச்சனை. சரியான தூக்கமின்மை, உடல்நலக் கோளாறுகள் உள்பட பல காரணங்களால் வாய் துர்நாற்றம் வரலாம். வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்தால் மாற்றத்தை உணருவீர்கள். உணவு உண்டதும் வெறும் வெற்றிலையை மென்று தின்றாலும் வாய் துர்நாற்றம் இருக்காது. இப்படி வெற்றிலையை மென்று தின்றால் பற்கள் ஆரோக்கியம் மேம்படும். பல் ஈடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாவால் வரும் துர்நாற்றம், பல் சொத்தை ஆகியவையும் நீங்கும். 

Tap to resize

முடி உதிர்வு 

வெற்றிலை நம்முடைய முடியை பலப்படுத்தும். வெற்றிலையை மையாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் தேங்காய் எண்ணெய் கொஞ்சம் கலந்து தலைமுடியின் வேர்கால்களில் நன்கு தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதற்கு பிறகு தலைக்கு குளித்தால் புத்துணர்வாக இருக்கும். இப்படி அடிக்கடி செய்து குளித்து வாருங்கள். முடி உதிர்வு பிரச்சனையே இருக்காது.  

முகப்பருக்கள் மறையும் 

முகத்தில் பருக்கள் இருந்தால் வெற்றிலையை அரைத்து போடலாம். பருக்கள் மீது அரைத்த வெற்றிலையை பூசி வந்தால் பருக்கள் காணாமல் போகும். ஏனென்றால் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை நீக்குவதில் உதவியாக இருக்கும். வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரால் முகம் கழுவினாலும் பருக்கள் மறையும். 

உடலில் துர்நாற்றம் 

உடலில் வீசும் துர்நாற்றம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அவதிக்குள்ளாக்கும். வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாறு கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். வெற்றிலை போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இது உடலில் நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. 

இதையும் படிங்க: உங்க சிறுநீரை கவனிக்காம விடாதீங்க! சிறுநீரில் இந்த மாற்றம் இருந்தால், சிறுநீரகப்பை கேன்சர் இருக்கலாம்..!

தோல் ஒவ்வாமை

உங்களுக்கு சருமத்தில் அலர்ஜி இருந்தால் வெற்றிலை உதவும். தோலில் அரிப்பு, சொறி மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெற்றிலை போட்டு கொதித்த நீரால் குளிக்கலாம். இந்த தண்ணீரில் நாள்தோறும் குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். அரிப்பு கண்ட இடத்தில் வெற்றிலையை அரைத்து பூசி வர குணமாகும் வாய்ப்புள்ளது. 

வெற்றிலையை சுவைக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதன் மருத்துவ நன்மைகளை பெற உரிய வகையில் பயன்படுத்தி பலம் பெறுங்கள். 

இதையும் படிங்க: நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

Latest Videos

click me!