திருமணம் என்றாலே அதற்கான ஏற்பாடுகள் அமர்களமாக இருக்கும். புத்தாடைகள், பிரம்மாண்ட அலங்காரம், உணவு என எல்லாமே சிறப்பாக இருக்க மணமக்கள் வீட்டார் மெனக்கெடுவார்கள். திருமண அழைப்பிதழுக்கு தனிக்கவனம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு வித்தியாசமாக ஒரு அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்திருக்கிறது.
இங்கு ஒருவர் மகிழ்ச்சி பொங்க தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த திருமண அழைப்பிதழில் திருமணத்திற்கு வர வேண்டாம் என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில், "திருமணத்திற்கு அனைவரும் மறக்காமல் வாருங்கள் என்று அச்சிடுவதற்கு பதிலாக, திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அச்சிடப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த தவறை செய்தது சம்பந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ்தான். ஆனால் இவர்களாவது கவனித்து மாற்றியிருக்கலாம். ஆனால் அப்படியே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால் கல்யாணம் மாதிரியான விழாக்களின் போது கவனமாக இருக்க வேண்டாமா? என தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த பத்திரிக்கையை கண்டு, திருமணத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதாக பலர் தவறாக நினைத்துக்கொண்டனர். சமூக வலைதளங்களில் தற்போது லைக்குகளை குவித்து வரும் அந்த பத்திரிக்கைக்கு இப்படி தலைப்பிடப்பட்டுள்ளது:"வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், அழைப்பிதழில் எழுதியிருப்பதைப் பார்த்ததும், திருமணத்துக்குச் செல்வதா? வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது".
இதையும் படிங்க: அடிக்கடி பாக்கெட் உணவுகளை ருசித்து உண்பவரா நீங்க!! அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?