புகைபிடித்தல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதிலும் பாலியல் ஆரோக்கியத்தை ரொம்பவே பாதிக்கிறது. புகைப்பிடிப்பதை விட்டுவிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். புகைபிடிப்பதால், தோல், நுரையீரல், இதயம் அல்லது இனப்பெருக்க அமைப்பு உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. புகைபிடிப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை நாசம் செய்வது மட்டுமல்லாமல், பாலியல் உறவிலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. பல ஆய்வுகளும் இதை வெளிப்படுத்தியுள்ளன.
நீங்கள் புகைபிடிப்பதால் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆண்களின் விந்தணு டிஎன்ஏவுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்குறியின் வடிவ மாற்றம், விந்து தரம் குறைதல், விந்தணு எண்ணிக்கையில் குறைவு, விந்தணு இயக்கத்தில் மாற்றம் ஆகிய போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
பெண்கள் புகைப்பிடித்தால், கருப்பையில் பலவீனம் வரும். உங்களுக்கு யோனி வறட்சி, வலிமிகுந்த உடலுறவு ஏற்படலாம். புகைபிடித்தல் பெண்களுக்கு பாலுணர்வு குறையும். அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் இந்த பிரச்சனைகள் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
புகைபிடிப்பதை நிறுத்தினால் பாலியல் தூண்டுதல், ஆசை, பாலியல் உறவில் அதிக திருப்தி கிடைக்கும். புகைபிடிப்பவர்களை விட புகைபிடிக்காத ஆண்களுக்கு இரண்டு மடங்கு செக்ஸ் ஆசை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பதை விட்டுவிடும் ஆண்களுக்கு விரைவான விறைப்புத்தன்மை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சிகரெட்டில் உள்ள நிகோடின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. விறைப்புத்தன்மையை பராமரிக்க தேவையான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கைக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது.
இதையும் படிங்க: செக்ஸில் முழு திருப்தி அடையவில்லையா? அப்போ உங்க துணை இப்படி தான் நடந்துப்பாங்க!