அடிக்கடி தூக்க மாத்திரை போடுவதால்... உடலுக்கு வரும் பக்க விளைவுகள் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

First Published | Feb 20, 2023, 4:55 PM IST

Sleeping Pills: தினமும் தூக்க மாத்திரை போட்டு உறங்கி பழகியவர்களுக்கான முக்கிய பதிவு... தூக்க மாத்திரையின் பக்க விளைவுகள்.. 

பலருக்கு இன்றைய காலகட்டத்தில் தூக்கம் வருவதே இல்லை. சிலர் ஆழ்ந்த உறக்கம் கிடைக்காமல் நடுராத்திரி விழித்து கொள்வர். அதனால் தூக்க மாத்திரையின் உதவியை நாடுகின்றனர். இதற்கு காரணம் தூக்கமின்மை அல்லது பிற நோய்களாக இருக்கலாம்.மனச்சோர்வு, பதட்டம் ஆகிய மனரீதியான நோய்களுக்கு தூக்க மாத்திரைகள் ஆண்டி டிப்ரஸன்ட்களாக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இவை உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தை தரும். 

ஆனால் தூக்க மாத்திரைகளை நாள்தோறும் உண்பதால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். பல பக்க விளைவுகளை கூட சந்திக்க நேரிடும். இந்த எதிர்மறை பாதிப்புகளை அறிந்து கொண்டு தூக்க மாத்திரைகளிடம் இருந்து விலகி இருங்கள். அநாவசியமாக தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள். 

Latest Videos


மயக்கம் வரும்! 

தூக்க மாத்திரைகளை மீண்டும் மீண்டும் எடுத்து கொள்வதால், தூக்கம் மட்டுமல்ல மயக்கம் கூட எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களின் மூளையின் செயல்பாட்டை தூக்க மாத்திரைக் கட்டுப்படுத்துகிறது. எப்போதும் தலையில் கனம் இருப்பது போல் உணர்வு வரும். நீங்கள் பகலில் சாதாரணமாக கண் விழித்திருக்கும் போது கூட கண்கள் செருகி தூக்கம் வருவது போல உணரலாம். 

சுவாச பிரச்சனை 

தூக்க மாத்திரை அடிக்கடி எடுத்து கொள்வதால் சுவாசக் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்க மாத்திரைகளை உண்ணவே கூடாது. அவர்களுக்கு தூக்க மாத்திரை ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவதில்லை. இவை இயல்பான சுவாசத்தை பாதிப்படைய செய்யும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுத்தக் கூடியது. நாள்பட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கும் நோயாளிகள் தூக்க மாத்திரைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

அலர்ஜி வரலாம்..  

தூக்க மாத்திரைகள் உண்பது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். தூக்க மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தோல் வெடிப்பு, மார்பு வலி, குமட்டல், அரிப்பு மற்ற அறிகுறிகள் தென்படலாம். இவற்றில் ஏதேனும் ஒன்று வந்தாலும் நீங்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். 

தூக்க மாத்திரைகள் அடிக்கடி உண்பதால் மூளையின் செயல்பாடு மந்தமாகிறது. நினைவாற்றல், செறிவு பிரச்சனைகளுக்கு காரணமாகும். நீங்கள் சில விஷயங்களை மெதுவாக மறக்க ஆரம்பிக்கிறீர்கள். சாதாரண விஷயங்களை கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் திணறி போவீர்கள். மறதி ஏற்படும். 

அடிக்கடி தூக்க மாத்திரைகளை உண்பதால் உடலின் சாதாரண செயல்பாடுகள் கூட பாதிக்கின்றன. இது போதைப்பொருளைப் போல சிலருக்கு அடிக்‌ஷனை ஏற்படுத்துகிறது. அதை எடுத்து கொள்ளாவிட்டால், அவை வித்ட்ராயல் எனும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த நபர் அமைதியின்மையால் அவதிக்குள்ளாகிவிடுகிறார்.  

இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?

இயற்கையான முறைகளில் தூக்கக் கோளாறுகளை சரி செய்யவதே, தூக்க மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைக்க சிறந்த வழி. சிலர் தூக்க மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உண்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

இதையும் படிங்க; பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் அதிர்ஷ்டம்.. எந்த பகுதியில் விழுந்தால் கவனமா இருக்கணும் தெரியுமா?

click me!