கோடை காலம் வந்துவிட்டது- உணவில் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்..!!

First Published Feb 19, 2023, 1:53 PM IST

வெப்பம் அதிகரிக்கும் போது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். அவற்றைத் தடுக்க சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக அமையும்.
 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி வாரமும், மார்ச் மாதத்தில் துவக்க நாட்களும் கோடைக் காலத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தாகமும் சோர்வும் அதிகரித்து காணப்படும். காற்றின் வெப்பநிலை உயரும் பட்சத்தில், ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். வெப்பம் அதிகரிக்கும் போது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுக்க சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை உணவுப் பழக்கத்தில் இருந்து கொண்டுவர வேண்டும்.

Image: Getty Images

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்

வெயில் காலங்களில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். ஆனால் நம்மில் பலருக்கும் வெயிலில் சென்றவுடன் குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் உள்ளது. உடல் சூட்டை தணிக்க பலர் இப்படி குளிர்ந்த நீரை குடிப்பார்கள். ஆனால் அது தொண்டை புண் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும். எனவே சராசரி வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதை பழமாக்கிக் கொள்ளுங்கள். வேண்டுமானால் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். ஆனால் மருத்துவர்கள் கோடைக் காலத்தின் போது ஏற்படும் அதீத தாகத்துக்கு வெந்நீர் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
 

காபி குடிப்பதை குறைத்துவிடுங்கள்

கோடைக் காலத்தின் போது காஃபின் உள்ள பொருட்களை பருகுவது அல்லது சாப்பிடுவது உடல்நலனுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. அதிலும், உங்களுக்கு ஏற்கனவே நீரிழப்பு ஏற்படும் பிரச்னை இருந்தால், அடிக்கடி காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள். காஃபின் உள்ள பொருட்களை சாப்பிடும் போது, உடலில் எளிதாகவே நீரிழிப்பு ஏற்பட்டுவிட்டும். அதுவும் கோடைக் காலங்களில் அதற்கான வாய்ப்பு மேலும் அதிகம். இந்த பிரச்னையை தடுக்க டீ, காபி அதிகம் பருக வேண்டும். எதையும் அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.

சக்கரை சேர்த்து பழச்சாறு வேண்டாம்

மற்ற காலங்களில் பழங்களையும் பழச்சாறுகளையும் ஏறடுத்து கூட பார்க்க மாட்டோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால் கடைசியில் வரிசைக் கட்டி நின்று பழச்சாறு குடிப்போம். அதற்கு காரணம் ஜஸ் கட்டிகளும் இனிப்பான சக்கரையும் தான். பொதுவாக பழச்சாறுகளில் காணப்படும் சக்கரை உங்களுக்கு ஆற்றலை தருகிறது. ஆனால் இது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது. எனவே சர்க்கரையைப் பயன்படுத்தாமல் சாறுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள். பழங்கள் எப்போதும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. அதேபோல நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஜூஸுக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது.

இறைச்சி உணவுகள் வேண்டாம்

இந்த கோடையில் முட்டை, மீன், கோழிக்கறி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம். இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். முடிந்தவரை கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை காலத்தில் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதைவிட மோர் மிகவும் சிறந்தது. இதனுடன் அவ்வப்போது இளநீர், ஐஸ் மற்றும் சக்கரை சேர்க்காத எலுமிச்சைச் சாறு போன்றவற்றையும் பருகி வரலாம்.

click me!