ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சில சமயங்களில் நம்பமுடியாத அளவுக்கு சிலர் மீது ஈர்க்கப்படுகிறோம். உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஈர்க்கப்பட சில நேரம் ஒரு பார்வையே போதுமானதாக இருக்கிறது. ஒரு நபர் மற்றொருவர் மீது ஈர்க்கப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்த சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
சிவப்பு வண்ண ஆடைகள், சிவப்பு நிற லிப்ஸ்டிக், அதே வண்ண அணிகலன்களை அணியும் பெண்களிடம் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். சிவப்பு நிறம் உணர்ச்சிகளையும் பாலியல் ஆற்றலையும் குறிக்கிறது. இவர்களிடம் ஆண்கள் இயல்பாகவே ஈர்க்கப்படுவார்களாம்.
பெற்றோரைப் போல தோற்றமளிக்கும் அல்லது பெற்றோரை நினைவுவூட்டுபர்களிடம் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் தான் 'நீ எனக்கு இன்னொரு அம்மா' என ஆண்களும், 'நீ எனக்கு அப்பா மாதிரி' என பெண்களும் சொல்கிறார்கள் போல... ம்ம் அது மட்டுமா? வயது முதிர்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், வளரும்போது வயது மூத்த நபர்களிடம் ஈர்க்கப்படுவதாக கூட ஆய்வுகள் கூறுகின்றன.
உங்களைப் போலவே ஒத்த குணம், தோற்றம் கொண்ட நபர்களிடம் ஈர்க்கப்படுவீர்கள். ஒரே மாதிரியான முக அம்சங்களைக் கொண்டவர்களை நோக்கி மனம் சுண்டி இழுக்கப்படுவதை அனுபவித்திருக்கிறீர்களா? அந்த சமயங்களில் மனம் தறிக்கெட்டு உங்களை புரட்டி போடும்.
ஒரு நபரிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்தாமல் கொஞ்சம் புதிராக இருந்தால் உங்கள் மீது ஈர்ப்பு வரும். சின்ன மர்மத்தை வைத்திருக்கும் போது உங்கள் பின்னால் காதலனோ/ காதலியோ வர வாய்ப்புள்ளது. இது நீண்ட கால உறவிலும் நடக்கும். நீங்கள் மதுபோதையில் இருக்கும்போது அந்நியர்களால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது. மதுபோதையில் இருக்கும்போது நீங்கள் மக்களை அதிக மதிப்பிடுவீர்கள்.