திருமணமான பெண்களுக்கு 'இன்னொரு ஆண்' மேல ஆர்வம் இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களாம் தெரியுமா?

First Published | Feb 16, 2023, 5:41 PM IST

extra marital affairs: கணவன் மனைவி உறவில் முக்கியமே ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஆர்வம் தான். 

தாம்பத்தியத்தில் ஒருவர் ஆர்வம் காட்டாமல் போனால் அது தெளிவாக ஒரு விஷயத்தை நமக்கு சொல்கிறது. அவர்களின் நடத்தை கவனிக்கத்தக்க வகையில் மாறுகிறது. அது உங்கள் மனைவியாக இருக்கும்பட்சத்தில் இதயமே நொறுங்கி போகும். உங்கள் மீது அக்கறையே இல்லாத ஒருவருடன் வாழ்வது ஏமாற்றத்தையே அளிக்கிறது. 

சில நேரங்களில், தம்பதிகளுக்குள் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருக்கும் போது, ​​துணை மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். சில காலமாக உங்கள் கணவரோ, மனைவியோ உங்களிடமிருந்து ஏன் தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 

Tap to resize

உங்கள் துணை உங்களிடம் ஆர்வம் காட்டாமல் இருந்தால் வேறொருவர் மீது ஈர்ப்பு இருக்க வாய்ப்புள்ளது. வேறொரு நபரை காதலிக்கிறார்கள் அல்லது அவர்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியை காண்கிறார்கள். திருமணத்தை மீறிய உறவு இருக்க வாய்ப்புள்ளது. பொய்களை முழுவதுமாக மறைப்பதும், அடிக்கடி பொய் சொல்வதும் ஒரு கட்டத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வரும். 

முன்பு நீங்கள் இருவரும் செய்த மகிழ்ந்த செயல் இப்போது உங்களுடைய துணைக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறதா? அது அவர் உங்கள் மீது ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான அறிகுறி தான். காலப்போக்கில் ஆர்வம் படிப்படியாக குறைகிறது. அவர் உங்களுடன் உரையாட விரும்பவில்லை. உங்களுடன் எந்த திட்டமும் செய்வதில்லை. அவரது வாழ்க்கையின் முடிவுகளில் உங்களை ஈடுபடுத்துவதை தவிர்ப்பார். இதற்கு உங்களுக்கிடையே உணர்வுபூர்வமான தொடர்பு இல்லாதது தான் காரணம்.  

சின்ன கருத்துமோதல், விவாதத்திற்கே உங்கள் துணை மிகவும் விரக்தியடைந்தால், அவர் உங்களுடன் இந்த உறவைத் தொடர விரும்பவில்லை என அர்த்தம். உங்கள் துணைக்கு உங்கள் மீது ஈடுபாடு இருந்தால், அதிகம் கோபப்படாமல், வார்த்தைகளால் கொல்லாமல் பிரச்சனைகளை தவிர்க்க விரும்புவார். 

உறவில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது. ஆனால் முற்றிலும் உறவில் இருந்து விலகும் அறிகுறியல்ல. தம்பதிகளுக்குள் இந்த அறிகுறிகள் இருந்தால் பேசி சரிசெய்ய வேண்டும். உங்கள் துணை உங்களை விட்டு விலகி போனால் அது ஏன் என சிந்தியுங்கள். அந்தக் காரணங்களை கண்டறிந்து சரி செய்தால் மீண்டும் காதல் அரும்ப வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: இஷ்டத்துக்கு கணவனை மாற்றி கொள்ளும் பெண்கள்.. இந்த நாட்டில் பெண்களுக்கு வேற லெவல் சுதந்திரம் இருக்கு தெரியுமா?

இதையும் படிங்க: வீட்டுக்குள் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக உலாவும் மனைவி.. குழம்பி தவிக்கும் கணவன்.. நிபுணரின் பளீச் பதில்..

Latest Videos

click me!