அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!! இதோ..!!

First Published | Feb 15, 2023, 11:45 PM IST

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும் போது, அன்றைய நாளுக்கு வேண்டிய உற்சாகம் கிடைக்கிறதும். மேலும் லிபிடோ செயல்பாடும் சிறப்பாக அமைகிறது. தம்பதிகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான பிணைப்பு அதிகரிக்கிறது.
 

எந்தவிதமான அறிகுறிகளில்லாமல் தோன்றுவது தான் காதல். இதற்கு யாரு வேண்டுமானாலும் பலியாகலாம். ஆனால் இன்றைய காலத்தில் பிரச்னையாக இருப்பது உடலுறவு தான். திருமணமான அல்லது காதலில் இருக்கும் பலரும் முறையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் முறையான உடலுறவு இன்பம் கிடைக்காத இணையர்கள், விலகி இருக்க முடிவு செய்துவிடுகின்றனர். தங்களை உறவை பாதுக்காகவும், தக்கவைத்துக்கொள்ளவும் முயலுவது கிடையாது. 
 

எனினும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள விரும்புபவர்கள், அதிகாலையில் உடலுறவில் ஈடுபடலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன்மூலம் தம்பதிகளுக்கிடையேயான பிரச்னை சுமூகம் அடையும் என்றும், உறவும் உற்சாகம் பெறும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான மேலும் பல விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

காலை உணவின் போது இனிப்பு சாப்பிட்டால், ஒருவித புத்துணர்ச்சி தோன்றும். காலையில் உடலுறவு கொள்வதாலும் இத்தகைய உற்சாகம் ஏற்படும். மேலும் லிபிடோ செயல்பாடும் அதிகரிக்கும். இதன்மூலம் தம்பதிகளுக்கு இடையே உணர்வுபூர்வமான பிணைப்பு அதிகமாகிறது. 

Latest Videos


சமீபகாலமாக பலர் பணி அழுத்தம் காரணமாக உறவுச் சிக்கலை சந்தித்து வருகின்றனர். பகல் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு, இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் வரும். அதனால் உடலுறவு கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. அப்படிப்பட்டவர்கள் காலையில் உடலுறவு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அப்படிச் செய்வதால் காலையில் இருந்தே உற்சாகம் இருக்கும். ஒருவேளை காலை வேளையில் வேலைப் பழு அதிகரித்தால் கூட, அவற்றை உற்சாகத்துடன் மேற்கொள்ளலாம். 
 

சில தம்பதிகள் பேசுகையில் சனிக்கிழமை இரவு உறவுகொள்ளும் போது, அவர்களது பார்ட்னர்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அதே உற்சாகம் வார நாட்களில் இருப்பது கிடையாது என்று தெரிவிக்கின்றனர். அதனால்தான் காலையில் உறவு கொள்ளும் போது, வார நாட்களில் கூட உற்சாகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

காலையில் உடலுறவு கொள்வது இயற்கையாகவே ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல, படுக்கையில் ஜாலியாக இருப்பதாலும் எண்டோர்பின்கள் வெளியாகும். இவை மனைவி மீதான காதலையும் அன்பையும் அதிகமாக உணர வைக்கும். 

காலை உடலுறவு மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தம் குறைவதால் உடல் நிமத்தி பெறும். இதன்மூலம் ஈஸ்ட்ரோஜன் வெளியாகும். இது மேனிக்கு இளைமையையும் மற்றும் பளபளப்பையும் வழங்கும். 

click me!