உலகின் பல்வேறு நாடுகளில் சடங்குகள், உணவு, உடை, மொழி எல்லாமே வேறுபடும். திருமண மரபிலும் கூட இந்த வேறுபாட்டை அடையாளம் காணலாம். சில இடங்களில் அனைத்து சகோதரர்களும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள், சில பகுதிகளில் தாய்வழி மாமன்-மகள் திருமணம் நடக்கிறது. ஆனால் சில இடத்தில் கணவனையே மாற்றிவிடுகிறார்கள் தெரியுமா? ஆம் உண்மைதான். உலகின் பல பகுதிகளில் உள்ள இத்தகைய தனித்துவமான திருமண முறைகள் அதன் சடங்குகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
Image: Getty Images
இந்தோனேசியாவிற்கு அருகேயுள்ள நியூ கினியாவில் ட்ரோப்ரியான்ட் என்னும் பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. இன்றும் இவர்கள் பாரம்பரிய முறையை பின்பற்றிதான் வாழ்கிறார்கள். இவர்கள் ஆடைகளை உடுத்துவதில்லை. இங்குள்ள பெண்களுக்கு நீங்கள் எண்ணிப் பார்க்காத அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. ட்ரோபியன் சமூகப் பெண்கள் எவருடனும் உடல் ரீதியாக உறவுகொள்ள சுதந்திரம் உண்டு.
இந்தத் தீவில் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்வது தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த விதியை திருமணமான, திருமணமாகாத பெண்கள் ஆகிய இருவரும் பின்பற்றுகிறார்கள். பெண்களுக்கு முற்றிலும் சுதந்திரமான வாழ்க்கை இருப்பது போல ஆண்களுக்கும் உண்டு. கணவனை தவிர எப்போது ஒரு பெண் மற்றொரு ஆணை தேர்ந்தெடுக்கிறாள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் தன் கணவனுடன் நல்லவனாக இல்லை என்றாலும் அவனோடு எதுவும் ஒத்துப்போகாத சூழலிலும் அவனை மாற்றிவிடலாம். அவரை பிரிந்து வேறொரு துணையைத் தேர்வு செய்யலாம். ஆண்களுக்கும் இந்த முழுசுதந்திரம் உள்ளது. அவர்கள் வேறு பெண்களுடன் உறவு வைக்கலாம்.
பெண்கள் திருமணத்திற்கு முன்பும் உடல் ரீதியான உறவுகளை வைத்துக் கொள்ள இங்கு அனுமதி இருக்கிறது. உடலுறவுக்கு இங்கு கட்டுப்பாடுகள் இல்லை. திருமணத்திற்குப் பிறகு கன்னித்தன்மையை சோதிக்கும் பழக்கம் இல்லை. கன்னிப் பெண்களுக்கு என பிரத்யேகமாக புகுமாத்துலா என அழைக்கப்படும் ஒரு தனி வகை குடிசை வீடு அமைக்கப்படுகிறது. இங்கு பெண்கள் தங்கள் காதலனுடன் இருக்கலாம்.